ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

தருமபுரி எம்பி செந்தில்குமார் : நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன். பாத்ரூம் அடைத்துள்ளதாகவும் அதை கிளீன் செய்வீர்களா?

It is not a disgusting. Ill come and get it right, says Senthil kumar mp இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்
tamil.oneindia.com - VelmuruganP.தருமபுரி: தருமபுரி தொகுதி எம்பி டாக்டர் செந்தில்குமாரிடம் டுவிட்டரில் ஒருவர் பாத்ரூம் சாலரம் அடைத்துள்ளதாகவும் அதை கிளீன் செய்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அவர், நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல என கூறியுள்ளார்.
தருமபுரி தொகுதி எம்பி டாக்டர் செந்தில்குமார், தன்னுடைய தொகுதிவாசிகள் அடிப்படைகள் வசதிகள் தொடர்பாக டுவிட்டரில் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்அளித்து வருகிறார். அந்த குறைகளை சரி செய்து அதனை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார்.
தெருக்களில் மின்விளக்கு எரியாதமு, சாலைகள் சரியில்லாதது, , குடிநீர் தொட்டி இல்லாதது, குடிநீர் விநியோகம் இல்லாது உள்பட பல்வேறு பிரச்சனைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு அளித்து வருகிறார். இதேபோல் டுவிட்டரில் கேள்விகள் மக்கள் கேட்பதையும் அதன்பின்னர் அளிக்கப்பட்ட தீர்வுகளையும் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

இதனால் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமாரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். அப்படித்தான் அண்மையில் மொரப்பூர் அரசு மருத்துவமனையில் தெருவிளக்கு எரியாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்து இருந்த செந்தில்குமார், தற்போது விளக்குகள் எரிவதாக கூறியிருந்தார். இதற்கு கீழ் முத்துச்சாமி பழனி என்பவர், பத்ரூம் சாலம் அடைச்சுருக்கு.. செத்த கிளின்பன்றேலா... எனறு கேட்டிருந்தார்.
இப்படி கேள்விகேட்டவருக்கு பதில் அனுப்பியுள்ள செந்தில்குமார், "இதில் என்ன இருக்கு பழனி (கேள்வி கேட்டவர்) எஙகே என்று சொலல்லுங்கள்., நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல் தான்." என கூறியுள்ளார்.
இதனிடைடையே சிங்காரவேலன் என்பவர் பாத்ரூம் குறித்து கேள்வி எழுப்பியவரை கண்டித்துள்ளதுடன், பொதுமக்களுக்கு யாராவது ஒருவர் எந்த வகையிலாவது உதவுகிறார்கள். அதை கேலி செய்ய வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். அதையும் டாக்டர் செந்தில்குமார் தனதுடுவிட்டர் பக்கத்தில் புகைப்படமாக பதிவிட்டுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக