வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு?

இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு? இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு? Capture
ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வர்த்தகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள  டுவிட்டர் பதிவில், அமைச்சரவை கூட்டத்தின்போது இந்தியா குறித்து விவாதித்தோம்.< ஆப்கனுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் வான் வழி, நில வழிகளுக்கு தடை விதிப்பது பற்றி பேசினோம். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வரும் நில மற்றும் வான் வெளிகளுக்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக