புதன், 7 ஆகஸ்ட், 2019

ஸ்டாலின் மம்தா பானர்ஜி சந்திப்பு


தினகரன் : ென்னை: கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த மம்தா பானர்ஜியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் நடக்கிறது. சிலையை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை வந்த அவர் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து இரு தலைவர்களும் கலைஞர் சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக