மாலைமலர் : புதுடெல்லி:
பாரளுமன்றத்தின்
இரு அவைகளும் நடைபெறும் விவாதம், வாக்கெடுப்பு போன்ற அனைத்துவிதமான
செயல்பாடுகளும் காகிதத்தில் அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில், மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தின் போது
அவையில் காகித பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:
மக்களவையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும்
காகிதத்தாள் பிரதி பயன்படுத்தப்படுகிறது. உறுப்பினர் ஏதேனும் கேள்வி
ஏழுப்ப வேண்டுமானாலும், வாக்கெடுப்பு நடைபெறும் போதும் என எல்லாவிதமான
செயல்களும் காகிதத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
மேலும்,
அவை நடவடிக்கைகள் அனைத்தும் காகித வடிவில் கோப்புகளாக சேமித்து
வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கில் அரசுக்கு செலவு ஏற்படுவது
மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கில் மரங்களும் வெட்டப்படுகிறது.
ஆகையால்
செலவினத்தை குறைத்து இயற்கையை பாதுகாக்கும் வகையில் மடிக்கணினி போன்ற
தொழில்நுட்ப உபகரணங்களை அவை செயல்பாடுகளில் பயன்படுத்த அனைத்து
முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காகிதமல்லாத மக்களவை என்ற
புதிய நடைமுறை செயல்பாடுக்கு வர கால அவகாசம் தேவைபட்டாலும் இந்த முயற்சி
நிச்சயம் வெற்றி அடையும்.
இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
சபாநாயகரின் கருத்துக்கு பதில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கூறியதாவது:-
சபாநாயகர்
கூறிய காகிதமற்ற மக்களவை என்ற முயற்சி நிச்சயம் வரவேற்கதக்கது. ஆனால்,
மடிக்கணினி போன்ற தொழில்நுட்ப முறைகளை செயல்படுத்தப்பட்டால் தடையில்லா
இணையவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக