சனி, 17 ஆகஸ்ட், 2019

நாகாலாந்தில் தனிக்கொடியுடன் சுதந்திர தின கொண்டாட்டம் ... வீடியோ

ஏசியாவில் செய்திப்பிரிவு : இந்திய அரசுக்கு எதிராக இந்த விழா கொண்டாடப்படவில்லை, மாறாக எங்கள் தனித்துவம், அடையாளம், கலாச்சாரம், வரலாறு மற்றும் உரிமையைக் கொண்டாடவே இது கொண்டாடப்பட்டது. >நாகாலாந்தில் மிகுந்த செல்வாக்குள்ள அமைப்புகளில் ஒன்றான நாகா மாணவர்கள் கூட்டமைப்பு நாகா தேசியக் கொடியை ஏற்றி 73வது நாகா சுதந்திர தினத்தை நாகாலாந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று கொண்டாடியுள்ளனர். >1947-ம் ஆண்டு நாகாலாந்தைச் சேர்ந்த பல பழங்குடிகள் ஒன்று சேர்ந்து தங்கள் நாகா தேசியக் கொடியை அந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அறிமுகப்படுத்தினர். நாகாலாந்துக்கு 1963-ம் ஆண்டு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு இப்போது நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் நடந்தது. இந்தியாவில் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, சுதந்திரத்திற்கான தங்களது உரிமையைப் பறைசாற்றவே நாகா தேசியக் கொடியை அவர்கள் அறிமுகப்படுத்தினர்.

>நாகாக்கள் ஒவ்வொரு வருடமும் இந்த நாகா சுதந்திர தினத்தை கொண்டாடினாலும், இந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் இந்நிகழ்வு பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றது.
நீலவண்ணத்தில் மூன்று வண்ணக்கோடுகள் கொண்ட நாகா தேசிய கொடு நேற்று நாகாலாந்து முழுக்க சரியாக காலை 11 மணிக்கு ஏற்றப்பட்டது. தலைநகர் கோஹிமாவில் அங்குள்ள நாகா பூங்காவில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ள நாகா மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நினோட்டோ அவோமி, இந்த நிகழ்வுகளில் எந்த அரசியல் செய்திகளும் இல்லை எனத் தெரிவித்தார்.

எங்கள் அமைப்பு இந்திய அரசுக்கு எதிராக இந்த விழாவைக் கொண்டாடவில்லை, மாறாக எங்கள் தனித்துவம், அடையாளம், கலாச்சாரம், வரலாறு மற்றும் உரிமையைக் கொண்டாடவே இது கொண்டாடப்பட்டது. 1000 பேருக்கும் அதிகமானோர் கொஹிமாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்” எனவும் அவோமி தெரிவித்தார்.;">முன்னதாக செவ்வாய்க் கிழமை தனி தேசியக் கொடியை ஏற்றுவது சட்டப்படி உகந்ததா என்பதை நாகா மாணவர்கள் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்தவேண்டி நாகாலாந்தின் 11 மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கும், மாநில அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

;நீலவண்ணத்தில், வானவில்லோடு ஒரு நட்சத்திரம் இருக்கும் இந்த கொடி அப்படியே நாகா சோசலிஸ கவுன்சிலின் கொடியைப் போலவே ஒத்துள்ளது. அந்த அமைப்பு ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அதற்கு இந்திய அரசு தடை விதித்து அதை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

ஆனால் இந்த நாகா தேசியக் கொடி எல்லோருக்கும் பொதுவானது என அவோமி தெரிவித்துள்ளார்.

புதன் கிழமை நடந்த இந்த நிகழ்வு இந்நாள்வரை இவ்வளவு பெரிய அளவில் பெரும் அளவில் மக்கள் பங்குபெறும் நிகழ்வாக நடந்ததில்லை. முக்கியமாக நாகாலாந்து பழங்குடியினரின் 20 அமைப்புகளின் தலைவர்களும் ஒன்றாக இந்த நிகழ்வுகளில் பங்குபெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக