செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

ரஷ்யாவில் அணு கதிர் விபத்து.. செய்திகளை மூடி மறைக்கும் ரஷியா .. அடுத்த செர்னோபில்?


மின்னம்பலம் : ரஷ்யாவில் நிகழ்ந்த அணுசக்தி ஏவுகணை சோதனை வெடிப்பில் ஐந்து அணுக் கதிர் பொறியாளர்கள் பலியாகியுள்ளனர்.
சென்ற வாரம், ரஷ்யாவில் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் ஐந்து அணுக் கதிர் பொறியாளர்கள் இறந்துள்ளனர். தொடக்கத்தில் இதனை மறுத்து வந்த ரஷ்யா தற்போது இதனை ஒப்புக்கொண்டுள்ளது. இது ரஷ்யாவின் ரகசிய ஆயுதத் திட்டம் குறித்த பல கேள்விகளை உலக அரங்கியில் எழுப்பியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஆக. 8) ரஷ்யாவில் நியோனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே பெரிய விபத்து ஏற்பட்டது. இச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள் விபத்து நிகழ்ந்த மறுநொடியே கடலுக்குள் தூக்கி வீசியிருக்கிருந்து இந்த கதிர் வீச்சு.
நியோனோக்சா சோதனை தளத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் உள்ள செவெரோட்வின்ஸ்கில் பகுதியில் சாதாரண அளவை விட பதிவுசெய்யப்பட்ட காமா கதிர்வீச்சு 16 மடங்கு அதிகமுள்ளதாக வானிலை கண்காணிப்பு சேவையான ரோஸ்கிட்ரோமெட் தெரிவித்துள்ளது.


கடந்த வாரம் சைபீரியாவில் உள்ள ரஷ்ய ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் வெடிப்பில், ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 16,000 க்கும் அதிகமான மக்களை வீடுகளை விட்டு வெளியேற உடனடியாக உத்தரவிடப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இவ்விபத்தால் ரஷ்யாவின் மீது அமெரிக்கா தனது சந்தேகப் பார்வையை கூர்தீட்டி வருகிறது.
“1986 ஆம் ஆண்டில் அண்டை நாடான உக்ரேனில் செர்னோபில் விபத்து நடந்தபோது என்ன நடந்தது என்பதை இங்குள்ள பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக இது மிகவும் மாறுபட்ட அளவிலானது, ஆனால் அதே நேரத்தில் அந்த நேரத்தில் நடந்தது போலவே தகவல் இருட்டடிப்பு தற்போது நிகழ்ந்து வருவதாக, "என்று மாஸ்கோவிலிருந்து அல் ஜசீரா செய்தியாளர் ஸ்யெப் வைசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக