ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

திருமாவளவன் : எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? புலிகளின் கேள்விக்கணை ...

இலக்கியா :  காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதீர்கள். நீங்கள் விமர்சிக்க விமர்சிக்க எம்மீது கடுமையான தாக்குதல் நடத்துகிறார்கள்“ இப்படி விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன்.
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இதனை தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து தாம் போராட்டம் நடத்தியதையும் அவர்கள் கண்டித்ததாகவும், இந்திய அரசை எதிர்த்து தம்மால் தீர்வை பெற முடியாதென்றும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுமென்றால் அவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும்படி புலிகள் குறிப்பிட்டார்கள் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
 ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?
நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள்..நீங்கள் ஓட்டு வாங்க நாங்கள் பலியாக வேண்டுமா’ எனக் கேட்டு திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார். நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“ என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக