புதன், 7 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் ... அமித் ஷாவுக்காக உருகும் சாரு நிவேதிதா?

LRJ : அரசியல் மொன்னைத்தனத்தில் தமிழ்நாட்டு எழுத்தாள
எலக்கியவாதிகளை அடிக்க இன்றுவரை வேறு எந்த தரப்பாராலும் முடியவில்லை. அவ்வளவு அபத்தமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் இருக்கும் இந்த எலக்கிய புடுங்கிகளின் அரசியல் வியாக்கியான ****வாதங்கள்.
அதில் சரோஜாதேவி வெர்ஷன்.2வும் நித்தியானந்தாவின் முன்னாள் சீடருமான சாருநிவேதிதா பேசும் அரசியல் எப்போதுமே தனிரகம். கஷ்மீர் மீதான டில்லி சுல்தானின் அப்பட்டமான அத்துமீறலை, அரசியல் சட்டம் மீதான தாக்குதலை ஆதரித்து அவர் பிழிந்திருக்கும் முறுக்கிருக்கிறதே அது தனி ரகம். லே மக்களின் ஏழ்மையை போக்கத்தான் அமித்ஷா இந்த அநியாயத்தை அரங்கேற்றியிருப்பதாக உருகோ உருகென உருகியிருக்கிறார்.
ஏழைப்பெண்ணின் வறுமையை கண்டு மனம் வருந்திய ஜமீந்தாரர், அவளை கண்கலங்காமல் வசதியாக வாழவைக்கவே பலவந்தமாக வல்லுறவு செய்து தன் வைப்பாட்டியாக தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார் என்றால் எவ்வளவு அபத்தமோ, அசிங்கமோ, ஆபாசமோ அதைவிட அசிங்கமும் அபத்தமும் ஆமாசமும் தான் கஷ்மீர் மீதான தற்போதைய டில்லி சுல்தானின் ஆங்கார அத்துமீறல்.
கண்ணுக்கு எதிரில் அரங்கேறும் அரசியல் சட்ட படுகொலையை கண்டிக்க துப்புகெட்ட எலக்கிய மொன்னைகள் அதை ஆதரித்து என்னமாய் முறுக்கு பிழிகின்றன?  இதற்கு தமிழ்நாட்டு பிராமணர்கள் யூதர்களைப்போல் ஒடுக்கப்படுகிறார்கள் என்று அழுதுபுரண்ட அசோகமித்திரன்கள் எவ்வளவோ தேவலாம். தானுண்டு; தன் ஜாதிக்கார மனுஷாளுண்டு என்று சுத்தபத்தமாக இருந்தார் மனுஷன்.

சாருவைப்போன்ற “கட்டுடைப்பு, கலக்கார” முகமூடிகளை போட்டுக்கொண்டு கயமைத்தனம் செய்யும் கழிசடைத்தனங்கள் அவரைப்போன்றவர்களிடம் இருக்கவில்லை.
உலகமே காறித்துப்பும் ஒன்றை ஆதரிப்பதில் தவறில்லை. அதன் பக்கம் நீதியிருந்தால்; நேர்மை இருந்தால்; நியாயம் இருந்தால். மனிதாபிமானம் கொஞ்சமேனும் மிச்சமிருந்தால். அவை எதுவுமே இல்லாத ஒரு பெருங்கேட்டை ஆதரித்து கம்புசுத்துவது வித்தியாசமாய் சிந்திக்கும் பாவ்லாவில் எதையோ கொண்டுபோய் எதிலோ சொறுகுவது போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக