வியாழன், 29 ஆகஸ்ட், 2019

BBC : தமிழக மாணவி நாசா விண்வெளி மையம் செல்கிறார் 10ஆம் வகுப்பு பெண் சாதனை

தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அமெரிக்க விண்வெளி
ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல தேர்வாகியிருப்பதாக தினத்தந்தி
செய்தி வெளியிட்டுள்ளது.
'கோ4குரு' என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது.
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே. தான்யா தஸ்னம், சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதல் இடம் பிடித்த ஜே. தான்யா தஸ்னம் என்ற மாணவி தமிழகத்தை சேர்ந்தவர். இவர் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கடச்சனேந்தலை சேர்ந்தவர் என்கிறது தினத்தந்தி செய்தி.

இவர் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஜே.தான்யா தஸ்னம் ஒரு வாரம் செலவிட இருக்கிறார். 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றி பார்ப்பதோடு, அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடவும் இருக்கிறார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக