ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

காபூல் திருமண வீட்டுக் தற்கொலை தாக்குதல்! - 60 பேர் உயிரழப்பு 180 பேர் படுகாயம்

Afghanistan blastAfghanistan blast    விகடன்:  காபூல் திருமணத்தை நிலைகுலையச் செய்த தற்கொலைப்படைத் தாக்குதல்! - 60 பேர் பலி; 180 பேர் படுகாயம்< ஆப்கானிஸ்தானில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள துபாய் சிட்டி திருமண மண்டபத்தில், நேற்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சுமார் 1000 பேர் கலந்துகொண்ட அந்த விழா, மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. மண்டபத்தில் அனைவரும் பரபரப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் வேளையில், கூட்டத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர், இசைக்குழு இருந்த மேடைக்கு அருகில் சென்று, தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.<
இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 60 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 180 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு, தாலிபான்கள்தான் காரணமாக இருக்கக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தநிலையில், அவர்கள் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.


”நான் பெண்கள் பகுதியிலிருந்தேன். அப்போது திடீரென ஆண்கள் பகுதியிலிருந்து பலத்த சத்தம் கேட்டது. அனைவரும் கண்ணீர்விட்டுக் கதறியபடி வெளியில் ஓடினர். சுமார் 20 நிமிடங்கள் வரை மண்டபத்தினுள் புகை படர்ந்திருந்தது. ஆண்கள் பகுதியிலிருந்த பலர் இறந்திருப்பர் அல்லது காயமடைந்திருப்பர். குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த 2 மணி நேரத்துக்குப் பிறகுதான், இறந்த உடல்கள் மண்டபத்திலிருந்து எடுக்கப்பட்டன” என சம்பவத்தை நேரில் பார்த்த முகமது ஃபர்ஹக் என்பவர் தெரிவித்துள்ளார்.



Afghanistan blast



Afghanistan blast
AP
வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபரின் செய்தித்தொடர்பாளர் செடிக் சித்திக், “காபூல் திருமண மண்டபத்தில் குண்டு வெடித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எங்கள் மக்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஒருவருக்கு பயிற்சி அளித்து, அவரது உடலில் குண்டுகளைக் கட்டி, திருமண மண்டபத்தில் வெடிக்கவைப்பது என்பது எப்படி சாத்தியம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தாக்குதல் நடந்த திருமண மண்டபத்தில், பல்வேறு பொதுக்கூட்டங்களும் நடைபெறுமாம். சில தினங்களுக்கு முன்பு, மண்டபம் உள்ள அதே சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் திருமணம், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெடித்த குண்டுகளில் மட்டும் இதுவரை பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Afghanistan blast



Afghanistan blast
AP

அந்நாட்டில், கடந்த வருடம் மட்டும் நடந்த தாக்குதலில் 3,800 மக்களும், 900 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இவை அனைத்துக்கும் தாலிபான் அமைப்புதான் காரணம் என கூறப்படுகிறது. ஷியா பிரிவு முஸ்லிம்கள்மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமெரிக்க அரசு, தாலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு, ஆப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாத அமைப்பு கண்டனம் தெரிவிப்பதாக அதன் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா மொஜாஹித் (Zabiullah Mojahid) தெரிவித்திருக்கிறார். அதேபோல், இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக