ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

பிகார் . ஒரே நேரத்தில் 3 அரசுப்பணிகள் - 30 ஆண்டுகள் சம்பளம் வாங்கிய நபர்!

Suresh Ramகலிலுல்லா.ச vikatan : ஒரே நபர் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக சம்பளமும் பெற்றுவந்துள்ளார்.
பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் வசித்துவருபவர் சுரேஷ் ராம். கடந்த 30 ஆண்டுகளாக வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக்கொண்டே சம்பளம் பெற்றுவருகிறார். அரசு வேலைகளில் சேர்வதற்குப் பலரும், கஷ்டப்பட்டு படித்து, போட்டித் தேர்வுகளில் முட்டி மோதிக்கொள்ளும் நிலையில், சுரேஷ் ராமின் இத்தகைய நடவடிக்கை அங்கிருந்தவர்களால் கண்டறியமுடியவில்லை.
அண்மையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை கொண்டுவந்தபிறகுதான் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. ஒரே பெயர் மற்றும் அதே விலாசத்தில் சுரேஷ் ராம் எப்படி பணியாற்றி வந்துள்ளார் என்பது அதிகாரிகளுக்கு குழப்பமாகவே இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், தகுந்த ஆதாரங்களுடன், ஆவணங்களுடன் சந்திக்கும்படி கூறியுள்ளனர். அப்போது சுரேஷ் ராம், ஆவணங்கள் என்றவுடன், தன்னுடைய பான்கார்டு, ஆதார் கார்டை எடுத்துச்சென்றுள்ளார். அதிகாரிகள் பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வரும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து சுரேஷ் ராம் தலைமறைவானார். அவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர். பீகார் மாநில அரசின் பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளர், பங்கா எனும் மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் ஓர் அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாகவும் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி சம்பளம் வாங்கியுள்ளார். சொல்லப்போனால் பதவி உயர்வுகளையும் வாங்கியுள்ளார். விசாரணை முடியும்போது, முழுத்தகவலும் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தை தீவிரமாக கவனித்து, பீகார் அரசாங்க துணைச் செயலாளர் சந்திரசேகர் பிரசாத் சிங், சுரேஷ் ராம் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக