வெப்துனியா :
முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப்பெற
வலியுறுத்தி ஜனாதிபதிக்கு ஒரு கோடி கையெழுத்து அனுப்ப முடிவு செய்துள்ளதாக
10 இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளனர்.
சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை, என்.ஐ.ஏ. சட்டம் குறித்து
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உருது மேம்பாட்டு
கழகத்தின் தலைவர் பண்ருட்டி கான், பைத்துல்மால் தமிழ்நாடு பொதுச்செயலாளர்
ஜஹிருதீன் அகமது, உலமாக்கள் பேரவை சார்பில் கான் பாகவி, இஸ்லாமிய பெண்கள்
திருமண கவுன்சில், ஜமத்துல் உலாமா பேரவை உள்பட 10 இஸ்லாமிய அமைப்புகளை
சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதிக்கு ஒரு கோடி கையெழுத்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது.முத்தலாக் தடை சட்டம் மற்றும் என்.ஐ.ஏ. சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி நாளை (இன்று) சென்னை எழும்பூரில் மிகப்பெரிய பேரணியை நடத்தவும், முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக