புதன், 31 ஜூலை, 2019

வெடித்து சிதறிய ஹூண்டாய் SUV எலெக்ட்ரிக் கார்..! – காரணம் என்ன?

sathiyam.tv/author/mohamed/ கனடாவில் உள்ள மான்ட்ரியல் பகுதியில் கராஜில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வெடித்துத் தீப்பிடித்துள்ளது.
யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. வெடிக்கும் அளவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது குறித்து மான்ட்ரியல் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம்தான் இந்த ஹூண்டாய் கோனாவை அதன் உரிமையாளர் வாங்கியுள்ளார். சார்ஜிங் பிரச்னையால் கூட இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், கோனாவின் பேட்டரியில் வெப்ப அழுத்தம் அதிகரித்தும் கார் வெடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கனடாவில் விற்பனையாகும் ஹூண்டாய் கோனாவில் 64.0kWh லித்தியம்-ஐயான் பாலிமர் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.

இதே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி தான் சமீபத்தில் தமிழகத்தில் தமிழக முதல்வரால் இந்தியாவுக்கான முதல் கோனா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 25.30 லட்சம் ரூபாய்க்கு இந்தக் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் கோனாவின் பேட்டரிக்கு எட்டு ஆண்டுகால வாரண்டி கொடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக