வெள்ளி, 26 ஜூலை, 2019

பேராசிரியர் S.F.N. செல்லையா மறைந்தார்.. திராவிடர் கழக 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் பிரசுரத்தின் ஆங்கில ...

Prince Ennares Periyar : இன்று காலையில் ரயில் விட்டு இறங்கியதும் வந்த, ஆசிரியர் குழு உறுப்பினருமான
பேராசிரியர் செல்லையா இன்று காலை மறைவுற்றார் என்னும் செய்தியாகும்.

சற்றும் எதிர்பாராத இன்னொரு பேரிடி போன்ற செய்தி, பிரபல ஆங்கிலப் பேராசிரியரும், 'THE MODERN RATIONALIST' மாத இதழின்
லயோலா கல்லூரியில் பணியாற்றிய அவர் பெரியார் திடலுக்கு வந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் பெரியார் திடலில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போதும் சரி, "பெரியார் திடலில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவரும், வெளிவர வேண்டிய எல்லா வெளியீடுகளுக்கும் என் பங்களிப்பு இருக்கும். இது சமூக நீதிக்காகப் பாடுபடும் இந்த இயக்கத்துக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை" என்று இயக்க வெளியீடுகளை மொழியாக்கம் செய்தும்,
The Modern Rationalist இதழில் பங்காற்றியபோதும் சரி, எவ்வித பொருளாதாரப் பலனையும் எதிர்பாராமல் தொண்டுள்ளத்துடன் வந்து பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பின் சமூகப்பணியாற்றுவதில் மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவர்.
இறை நம்பிக்கையாளர் எனினும், தந்தை பெரியார் மீதும், ஆசிரியர் வீரமணி அவர்கள் மீதும் மாறாப் பற்று கொண்டவர். ஆசிரியர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
அண்மையில் அவர் கொடுத்துச் சென்ற செல்வம்தான் இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Young friends, do you know?" தொகுப்பாகும்.

இளைஞர்களான எங்களைப் போன்றவர்களை ஊக்குவிப்பதிலும் பாராட்டுவதிலும் எல்லையில்லா மகிழ்ச்சி கண்டவர். அவரைக் காணும் போதெல்லாம் உற்சாகம் பிறக்கும்; இன்னும் இந்த இயக்கத்திற்கு பணியாற்ற வேண்டும் என்கிற ஊக்கம் சுரக்கும். கலைத் துறையிலும் பேரார்வம் கொண்டவர்.
திணைத்துணையாய் நாம் செய்பவற்றை பனைத்துணையாகக் கருதி பாராட்டுவர். அதேவேளையில் பனைத்துணையாக் இந்த இயக்கத்திற்குத் தொண்டாற்றியவர். உடல் நலம் குன்றினாலும் உழைக்கச் சளைக்காதவர். பெரியார் திடலுக்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சி கொள்பவர்.
தமிழ் படத்தினுடைய இயக்குனர் சி.எஸ்.அமுதன் அவர்களின் தந்தையார்!
பேராசிரியர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பேராசிரியர் அவர்களுக்கு வீரவணக்கம்!


ஆசிரியர் கே.வீரமணி : நமது இயக்கத்தின் கொள்கை களுக்கு மிகப் பெரும் ஆதரவாள ரும், 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' என்ற நமது ஆங்கில மாத ஏட்டின் ஆசிரியர் குழு வில் ஒருவரும், சிறந்த ஆங்கிலப் புலமையாளரு மான ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் மானமிகு ஷி.தி.ழி. செல்லையா (வயது 80) அவர்கள் திடீரென்று இன்று (25.7.2019) அதிகாலையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், துன்பமும் அடைகிறோம்.
நம்முடைய 'வாழ்வியல் சிந்தனை' கட்டு ரைகளை அழகிய ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு மூல காரண மானவர்.
எப்போதும் நமது இயக்க நிலைப்பாடுகளை ஆதரித்து விளக்கப்படுத்துபவர்.
அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; நமது திராவிடர் இயக்கத்திற்கே பெருத்த சேதாரம் - இழப்பு ஆகும்!
அவரது பிரிவால் வாடும் அவரது மகன், குடும்பத்தவர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.
அந்த தொண்டறச் செம்மலுக்கு நமது வீர வணக்கம்!


சென்னை தலைவர்,
25.7.2019 திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக