vikatan - சத்யா கோபாலன் :
’சில
நாள்களாக கர்நாடகாவில் நடந்துவரும் சம்பவங்கள் எனக்கு அதிக அழுத்தத்தைத்
தருகின்றன. அதனால் நான் மன உலைச்சலில் உள்ளேன்’ என சபாநாயகர் ரமேஷ்
தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில்,
காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்கள் தங்களின்
பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு நடந்துவந்த கூட்டணி ஆட்சி
கவிழ்க்கப்பட்டது.
தற்போது புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள பா.ஜ.க-வின் எடியூரப்பா, இன்று கர்நாடக சட்டமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேரை அம்மாநில சபாநாயகர் ரமேஷ் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பிற எம்.எல்.ஏ-க்களின் முடிவு, இரு தினங்களில் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில், ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக நேற்று அறிவித்தார். சபாநாயகரின் முடிவுக்கு அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில்,
சபாநாயகரின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் சித்தராமையா, “
கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது
வரவேற்கத்தக்கது. சபாநாயகர் எடுத்துள்ள இந்த நேர்மையாக முடிவு, நாடு
முழுவதும் பா.ஜ.க வலையில் விழும் எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு வலிமையான
எச்சரிக்கையாக இருக்கும்” என தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து,
தகுதிநீக்கம் பற்றி கருத்து பதிவிட்டுள்ள ம.ஜ.த, ''கர்நாடக சபாநாயகர்
தைரியமான, சிறந்த முடிவை எடுத்துள்ளார். பேராசை பிடித்த மற்றும் சுயநல
அரசியல்வாதிகளுக்கு இது நல்ல பாடமாக அமையும். இந்திய அரசியலமைப்புக்கு
எதிராகச் செயல்பட்டால் இதுதான் நிலை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக