புதன், 31 ஜூலை, 2019

காங்கிரஸ் தலைவராக பிரியங்காவை தேர்ந்தெடுக்க நிர்வாகிகள் ... அடுத்த வாரம் தேசிய செயற்குழு கூட்டம்

dinakaran.com : டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக
பிரியங்கா காந்தியை பதவி ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல்  காந்தி தேர்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தலைவராக பொறுப்பேற்ற பின் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி  படுதோல்வியை கண்டது. இந்த தோல்விக்கு பின்பு, தான் வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி அறிவித்தார். மூத்த தலைவர்கள் ராஜினாமா முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் தனது சகோதரியையும்  தற்போது உள்ள பதவியில் இருந்து விடுவியுங்கள், மேலும் காந்தி அல்லாத ஒரு புதிய தலைவரைத் தேடுமாறும் அவர் கட்சியை வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் 134 ஆண்டுகால வரலாற்றில் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின்  தலைமையில் செயல்பட்டு வந்த கட்சிக்கு இது ஒரு கடினமான இடைவெளியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


இந்தநிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பார்வை பிரியங்கா காந்தி பக்கம் திரும்பியது. அவரும் ஜனவரி மாதம் காங்கிரஸ் பொதுச் செயலாளராக அரசியலில் சேர்ந்த பின்னர், அவரது பாட்டி-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப்   போன்ற  பல குணாதிசயங்களைக் கொண்டவர் என்று அடிக்கடி மக்களால் பேசப்படுகிறார். அண்மையில்  உத்தரபிரதேச மாநில சோனபத்ரா என்ற இடத்தில், நிலம் தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே நடந்த சண்டையில் 9 பேர் படுகொலை   செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், பிரியாங்கா காந்தி சம்பவ இடத்திற்கு சென்று இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   ராகுல்காந்தி இல்லாத நேரத்தில் சவாலாக செயல்பட்டது. காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் தலைவராக தேர்தொடுக்கப்படுவார் என்றும் பேசிக்கொள்ளப்பட்டது. ஆனால் பிரியங்கா காந்தியும் தலைவர் பதவி   என்ற பேச்சிக்கே இடமில்லை என்று மறுப்பு தெரிவித்து. தற்போது வகித்து வரும் உயர் பதவிலியே பணியாற்ற விரும்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்தெடுக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலத் தலைவர்கள், முதலமைச்சர்கள் மற்றும் கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ்   செயற்குழுவின் உறுப்பினர்கள் சீல் வைக்கப்பட்ட உறையில் வாக்களித்தனர். அந்த உறைகளில் மல்லிகார்ஜூன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே, திக்விஜய் சிங், குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், சச்சின் பைலட் மற்றும் ஜோதிராதித்யா   சிந்தியா ஆகிய ஏழு பேரின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக