tamil.oneindia : சென்னை: தோள்பட்டை வலிக்கு மெடிக்கல் ஷாப்புக்கு போன குமாருக்கு, அங்கேயே ஊசி போட்ட கொடுமையால் வாயில் நுரை தள்ளியே இறந்துவிட்டார்.
அம்பத்தூர் அடுத்த மாதனாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார். இவர் ஒரு டைலர். கல்யாணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.< 4 மாசமாக முதுகுவலி இவருக்கு இருந்து வந்துள்ளது. அதனால் சூரப்பட்டில் உள்ள ஸ்ரீசக்தி மெடிக்கல்ஸ் என்ற மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி குமார் போவார்.
இங்கு மருந்துமட்டுமில்லை, நோயாளிகளை அங்கேயே உட்கார வைத்து மெடிக்கல் ஷாப் ஓனர் குமார் ஊசியே போட்டு அனுப்புவாராம். இப்படி அடிக்கடி குமார் ஊசி போட்டு கொண்டு வந்துள்ளார்.
நேற்று ராத்திரியும் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பினார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு வலிப்பு வந்துவிட்டது. திடீரென மயங்கி விழுந்த அவரை புழலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வீட்டில் இருந்தவர்கள் தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் குமார் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.
தப்பான ஊசியை போட்டு குமாரை கொன்றுவிட்டதாக, மெடிக்கல் ஷாப் ஓனர் பாஸ்கர் மீது அம்பத்தூர் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரும், மெடிக்கல் ஷாப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான், அந்த மெடிக்கல் ஷாப்புக்கு லைசென்ஸே கிடையாது என்று தெரிய வந்துள்ளது.
இதில் சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு ஊசி போட்ட பாஸ்கர், பிளஸ் டூ வரைதான் படித்திருக்கிறாராம். இதையடுத்து, போலீசார் பாஸ்கரை போலீசார் கைது செய்து, குமாருக்கு என்ன ஊசி போட்டார் என்று விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக