செவ்வாய், 30 ஜூலை, 2019

மாட்டுக் குண்டர்களின் தாக்குதலைத் தடுக்க அமித் ஷா தலைமையில் குழுவாம்!

lynchnakkheeran.in - ஆதனூர் சோழன் : நேரடியாக மூக்கைத் தொடுவதற்கு பதிலாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதே பாஜகவின் பாணி. நீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றவே இதுபோன்ற பல பாணிகளை பாஜக கைவசம் வைத்திருக்கிறது. இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும் அடித்துக் கொல்வதற்கு குண்டர்களை உருவாக்குவதும் பாஜகதான். மாட்டுக் கறி தின்றான் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட மறுத்தான் என்றும் இதுவரை 400க்கு மேற்பட்ட அப்பாவிகளை காவிக் குண்டர்கள் கொன்றிருக்கிறார்கள். அப்படிக் கொன்றவர்கள் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எதையும் சம்பந்தப்பட்ட பாஜக அரசுகள் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் கொடுத்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இந்நிலையில்தான், அப்பாவிகளை கும்பலாக தாக்கி கொலை செய்வதைத் தடுக்க 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அறிவித்திருந்தது. அதை இத்தனை மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதும் தூசு தட்டியிருக்கிறது.
பசுக்குண்டர்களையும், ஜெய் ஸ்ரீராம் குண்டர்களையும் தடுத்து நிறுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்திருக்கிறார். இந்தக் குழுவுக்கு தலைவர் யார் தெரியுமா? சாட்சாத் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். இந்த அறிவிப்பைக் கேட்டதும், அரசியல் விமர்சகர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்களாம்.
ஆனால், அமித் ஷா தலைவரானதும், தாக்குதல் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்று ஒரு பகுதியினரும், தாக்குதல் குறைய வாய்ப்பு இருப்பதாக ஒரு பிரிவினரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். எப்படியோ தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் நாட்டுக்கு நல்லது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக