செவ்வாய், 16 ஜூலை, 2019

சீனாவில் பெண்களின் ஆயுள் அதிகரித்து வருவது ஏன்?

சீனாவில் பெண்களின் ஆயுள் அதிகரிப்புசீனாவில் பெண்களின் ஆயுள் அதிகரித்து வருவது ஏன்?   மாலைமலர்:  சீனாவில்   வாழும் பெண்களின் சராசரி அதிகபட்ச வாழ்நாளின் ஆயுள் எதிர்பார்ப்பு அளவு தற்போது 84.63 ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீன மூதாட்டி! பீஜிங்: உலகளாவிய வகையில் மக்கள்தொகையில் மிகப்பெரிய நாடான சீனாவில் வாழும் மக்களின் ஆயுள் காலம் இதர மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களின் ஆயுள் காலத்தைவிட சற்று அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்வதாக முன்னர் புள்ளிவிபரங்கள் வெளியாகின. கடந்த 2017-ம் ஆண்டில்  82.15 வயதாக இருந்த பெண்களின் அதிகபட்ச ஆயுள் எதிர்பார்ப்பு 2018-ம் ஆண்டு நிலவரப்படி 84.63 ஆக அதிகரித்துள்ளது.< அரசு காப்பீடு திட்டத்தின்கீழ் தாராளமான மருத்துவ வசதி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களினால் அங்கு பெண்களின் ஆயுள் அதிகரித்து வருவதாக அறிந்து கொள்ள முடியும்.


இதேபோல், கடந்த 1979-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மகப்பேறின்போது பெண்கள் உயிரிழப்பது 68 சதவீதம் குறைந்துள்ளதாகவும், குழந்தைகள் இறந்தே பிறப்பது 88 சதவீதம் குறைந்துள்ளதாகவும் சீனாவின் தலைநகரான பீஜிங் நகர மாநகராட்சியின் சுகாதாரக்குழு வெளியிட்ட புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக