திங்கள், 22 ஜூலை, 2019

அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் மறைக்க ஜீயர் எதிர்ப்பு ... வசூல் வேட்டை ருசி !

LRJ   : அந்த காலத்துல சோடாபாட்டில், சைக்கிள் செயினெல்லாம் இல்லே. இப்ப அதையெல்லாம் எப்படி வீசறதுங்கற தாக்குதல் கலையெல்லாம்
கத்துகிட்டவங்க ஜீயரா இருக்கோம். பெருமாளை நாங்க பாதுகாப்போம். இனிமே அவரை வெளிலயே இருக்க விடுங்கோ.”
Jokes apart, அத்திவரதர் பத்தி வேதம், ஆகமம், அப்படி இப்படின்னு இத்தனை நாள் அளந்ததெல்லாம் பச்சைப்பொய்க்கதை என்று சாட்சாத் ஜீயரே பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்துக் கோவிலில்களில் புது சிலைகள் நிறுவப்படும் போது பழைய சிலைகள் தண்ணீரில் விடப்படுவது தமிழ்நாடு முழுக்க நடந்த, இன்றும் நடக்கும் கோவில் சார்ந்த ஒரு மதசடங்கு. ஆகமக்கோவில்களில் மட்டுமல்ல ஆகமங்களுக்குள் வராத கோவில்களிலும் இதுவே நடைமுறை.
எங்கள் ஊர் மந்தையில் தெருவின் நடுவில் இருக்கும் ஆளுயர சத்தியம்மாவுக்கு “ஆயுள் தீர்ந்துவிட்டதாக” கூறி பழைய சத்தியம்மா கல்லுக்கு பதில் புதுக்கல் நட்டபோது பழைய சத்தியம்மாவை கொண்டுபோய் மலையோர ஓடையில் விட்டார்கள். இது போன்ற நடைமுறைகள் வேறு பலகோவில்களிலும் இன்றும் நடக்கிறது. குளம், ஏரி, ஓடை, ஆறுகளில் இப்படி பல பழைய சிலைகள் இருக்கின்றன.

அப்படி கோவில் குளத்தில் விடப்பட்ட ஒருபழைய சிலையை குளம் தூர்வாரும்போது யாரோ பார்த்து எடுத்து பக்திப்பரவசமாகி கற்பித்த கதையை வைத்து கோவில் பட்டர்கள் எல்லாம் கூடி தாங்கள் கூடுதல் வருமானம் பார்க்க கட்டிவிட்ட புனைகதைகளை புராணங்களாக்கி கல்லா கட்டிய கண்ணியவான்கள் இப்போது அதை நிரந்தர வருமானத்துக்கான வழியாக்க முயல்கிறார்கள். அவ்வளவுதான் அத்திவரதர் மகாத்மியம். இதுக்கு என்னா buildup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக