புதன், 10 ஜூலை, 2019

சுதந்திர பஞ்சாப் ஆதரவு அமைப்புக்கு மத்திய அரசு தடை.. .. நீதிக்கான சீக்கியர்கள் அமைப்புக்கு..

தனிநாடு போராட்டம்
காலிஸ்தானை ஆதரிக்கும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்புக்கு மத்திய அரசு தடைமாலைமலர் : பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க போராடும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்புக்கு தடை விதிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நீதிக்கான சீக்கியர்கள் புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பு ஆதரவு அளிக்கின்றது.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக தூண்டி விடப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (முன்னாள்) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு அளிக்க வேண்டும் என சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. பின்னர், அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அடுத்த ஆண்டு அங்குள்ள சீக்கியர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.<
இந்நிலையில், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும்  ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பை சட்டப்புறம்பான அமைப்பாக மத்திய மந்திரிசபை இன்று அறிவித்துள்ளது. தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில அரசுகளின் கருத்துகளை அறிந்த பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக