திங்கள், 1 ஜூலை, 2019

ஆணவ கொலைகளின் பின்னணியில் ஜாதி சங்கங்களே .. முக்கிய காரணம்?

Shalin Maria Lawrence : இன்று ஆணவ கொலைகள் அதிகரித்ததின் பின்னணியில் முக்கிய காரணியாக இருப்பது ஜாதி சங்கங்கள்.
ஒரு குறிப்பிட்ட தலைமுறையை விட இப்பொழுது இருக்கும் இளைய தலைமுறை அதிகமா ஜாதியின் பெயரில் வன்முறையில் இறங்கி இருப்பதற்கு காரணம் இவைகளே.
குறிப்பாக கோவையில் நடந்த கனகராஜ் கொலை.பெற்றோரே ஒருவழியாக சம்மதித்த பின் அவர்களை மீறி சகோதரன் கொலை செய்தது நாம் அறிந்ததே.
இன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண் வயதுக்கு வந்ததில் இருந்து அவளை கூர்மையாக ஜாதி சங்கங்கள் கவனித்து கொண்டே இருக்கின்றன.
திருமண நிகழ்வுகள் ஜாதி சங்கங்கள் தலைமையில் நடக்கின்றன...அங்கே வாழ்த்துரை என்கிற பெயரில் ஜாதி சங்க தலைவர்கள் தங்கள் சமூக பெண்களை மிரட்டுவதும் ,தங்கள் சமூக ஆண்களை வெறியேற்றுவதும் முழு மூச்சாக நடைபெற்று கொண்டு இருக்கின்ற.
ஜாதி சங்கங்கள் தங்களை காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கையில் தங்கள் பிள்ளைகளை கொன்று விட்டு சிறை செல்லவும் தயாராகின்னர் பெற்றோர்கள்.
கூலி படை வேண்டுமா ஜாதி சங்கங்களை அணுகலாம்.
கொலைக்கு பணம் வேண்டுமா ஜாதி சங்கம் கொடுக்கும்.
வக்கீல் வேண்டுமா ,ஜாமீன் வேண்டுமா சங்கம் ஏற்பாடு செய்யும்.
வழக்கில் இருந்து வெளியே வரும்வரை அவர்களை குடும்பத்தை பார்த்து கொள்ளும்.

எந்த சட்டமும் ஜாதி சங்கங்களை பயமுறுத்தாது.
ஏனென்றால் இந்த நாட்டில் சாதிய வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் அநேகம் உள்ளன ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் சிக்கல். போலீஸ் துணையும் ,அரசியல் பலமும் இருந்தால் எந்த சட்டதையும் இங்கே எளிதாக ஏமாற்றி விடலாம்.
ஜாதி சங்கங்களுக்கு இதெல்லாம் கால் தூசு.
ஆக இங்கே பிரச்னையின் வேர் யார் என்று நமக்கு தெரிந்து இருக்கிறது.
ஆனால் இதே ஜாதி சங்கங்களுடன் தேர்தல் வெற்றிக்காக இணக்கமான நட்பை பேணும் அரசியல் கட்சிகள் தார்மீக ரீதியாக அந்த சங்கங்களை கேள்வி கேட்கும் உரிமையையும் இழந்து விடுகின்றனர்.
அதிகம் புரட்சி பேசும் கட்சிகள்தான் ஜாதி சங்கங்களுடன் mutually beneficial உறவில் இருக்கிறார்கள்.
சில முக்கிய அரசியல் கட்சிகள் இந்த ஜாதி சங்கங்களின் தலைவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுப்பது வரை செல்கின்றன.
அவர்கள் பாவங்கள் எல்லாம் கூட்டணி மேடையிலேயே மன்னிக்க படுகின்றன.
பின்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் தவிர இங்கே வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் கட்சிகள் இறங்குவது கிடையாது.
This is a vicious cycle.
ஜாதியை ஒழிப்பது மிக கடினமான காரியமாக இருக்கலாம் ஆனால் ஜாதி ஒழிப்பு என்பது முடியாத காரியம் கிடையாது.
ஆனால் அதற்கான ஒரு process இருக்கிறது.
ஆனால் அந்த வழிமுறைகளுக்கு மிக நேரெதிரான காரியங்களை செய்வது ,குறிப்பாக களைக்க பட வேண்டிய ஜாதிய சங்கங்களோடு நட்புறவாக இருப்பது ஆணவ கொலைகளை மேலும் வளர்க்கும்.குறைக்காது.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது...
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
திருடன் தானாக திருந்துவது இருக்கட்டும்....Atleast என் அரசியல்வாதிகள் திருடனை கேள்வி கேட்கும் இடத்திலாவது இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை ஆண்டவரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக