வெள்ளி, 19 ஜூலை, 2019

இந்தியில் விஞ்ஞானம் எதையும் கற்க முடியாது.. இந்தியில் விஞ்ஞான அறிவியல் நூல்கள் ? ...

Satva T : ஏன் இந்தி தேவையில்லை?
1. இந்தியை கற்க தேவையில்லை என்பதற்கு பல பல காரணங்களை அடுக்க தேவையில்லை. ஒரே ஒரு கீழ்கண்ட காரணம் போதுமானது
இந்தியில் விஞ்ஞானம் எதையும் கற்க முடியாது. ஏனெனில் இந்தியில் எந்த விஞ்ஞானமும் கற்பிக்கபடுவதில்லை. அதற்குரிய புத்தகங்கள், தரவுகள், ஜர்னல்கள் ஏதும் இந்தியில் இதுவரை இல்லை. இருக்கவும் போவதில்லை.
இந்தி பேசும் மாநிலங்களில் கூட விஞ்ஞானத்தை ஆங்கிலத்திலேயே கற்கின்றனர்.
எடுத்துக்காட்டாக இந்தி பேசும் மாநிலத்தை சார்ந்த ஒருவர் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) அல்லது தானியங்கி அறிவியல் (Automation) பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் அதனை ஆங்கிலத்தில் மட்டுமே செய்ய முடியும். இந்தியில் எந்த காலத்திலும் சாத்தியமில்லை.
ஆக இவ்வாறு அவர்களுக்கே ஒரு உபயோகமற்ற மொழியாக உள்ளது தான் இந்தி.
2. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்வோரை விட
தமிழகத்துக்கு வரும் வெளிமாநிலத்தோர் மிக மிக மிக மிக அதிகம்
கடந்த பத்து வருடங்களில் 70 லட்சம் வெளிமாநிலத்தோர் தமிழகத்துக்குள் வந்து இருப்பதாக செய்தி வந்துள்ளது. இவ்வாறு வருவோர் சாதாரண உடலுழைப்பு தொழிலாளிகள் மட்டுமல்ல. 'அறிவு துறையை' சார்ந்தோரும் பெருமளவு வருகின்றனர்.

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் ஏறக்குறைய 20-30 % வெளிமாநில மருத்துவர்கள் இப்போது உள்ளனர். அதுமட்டுமல்லாது சாப்ட்வேர் பொறியாளர்கள், உற்பத்தி துறையை சார்ந்தவர்கள், வணிகர்கள் என்று பல்வேறு துறைகளை சார்ந்த வெளி மாநிலத்தோர் தமிழகத்தில் தொடர்ந்து குடியேறி கொண்டுள்ளனர்.
ஆக
உண்மையில் இப்போது சூழல் என்னவெனில் வட மாநிலத்தார் தமிழை விருப்ப பாடமாக படிப்பது அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதேயாகும் !
குறிப்பு: தமிழர்கள் பெருமளவு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளி மாநிலங்களுக்கு செல்வதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக