nakkheeran.in - nagendran :
நெல்லையின்
முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையில், கொலையாளியை கைது செய்து விசாரித்த
நிலையில், அவரின் வாக்குமூலத்தின் படி கூலிப்படையாக செயல்பட்ட இருவரையும்
கைது செய்து விசாரித்து வருகின்றது நெல்லைக் காவல்துறை.! கடந்த 23ம்
தேதியன்று நெல்லை ரெட்டியாப்பட்டியில் திமுக-வின் முன்னாள் மேயர் உமா
மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப்பெண் மாரியம்மாள் உட்பட
மூவர் உடலெங்கும் கத்தியால் குத்திய நிலையில், சம்பவ இடத்திலே
உயிரிழந்தனர். இந்த கொலை தமிழகத்தையே உலுக்கியது.
கொலைக்கான காரணங்களில் பல்வேறு யூகங்கள்
நிலவி வந்த நிலையில், வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று தடயமாக சிக்க
சைக்கோ கொலையாளி போலீசாரிடம் சிக்கினான் என்பதனையும், அவன் மீது கயத்தாறு
மற்றும் பணவடலி சத்திர காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி
வழக்குகள் இருப்பதனையும் "நக்கீரன்" தெரிவித்திருந்தது. இந்நிலையில்
விசாரணையின் முடிவில், " தான் இந்தக் கொலைக்கு சூத்ரதாரி மட்டுமே.!!!
இரண்டு நபர்களைக் கொண்ட கூலிப்படையை அமர்த்தியே கொலை செய்தேன்." என வாக்குமூலம் கொடுக்க கூலிப்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனை உறுதி செய்யும் விதமாக, கொலை சம்பவம் நடந்த அன்று சந்தேகத்திற்கிடமான இருவர் இரு சக்கர வாகனத்தில் புரோட்டாக்கடை அருகிலும், அந்தப்பகுதியிலும் கடந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விசாரணையின் இறுதியில் என்ன நடந்தது.? யார் கொலையாளி..? என்பதனை அறிவிக்க தயாராகி வருகின்றது நெல்லைக் காவல்துறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக