திங்கள், 1 ஜூலை, 2019

ஸ்டாலின் : தமிழக மக்களிடம் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்


தினகரன் : சென்னை: தமிழக மக்களிடம் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக மக்கள் மீது வைத்த மோசமான, தரக்குறைவான விஷமத்தனமாக விமர்சனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் புதுச்சேரி ஆளநர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும். கிரண்பேடியை திரும்பப் பெற்று அரசமைப்பு சட்டத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக