புதன், 17 ஜூலை, 2019

விழுப்புரத்தில் திருநங்கை அபிராமி கொலை .. தலையில் அடிபட்டு வீதியில் ...

பண பிரச்சனை tamil.oneindia.com - /hemavandhana : ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை.. உறைய வைக்கும் சம்பவம்! -வீடியோ விழுப்புரம்: கூட் ரோட்டில் ரத்த காயங்களுடன் திருநங்கை அபிராமி பிணமாக விழுந்து கிடந்த சம்பவம் விழுப்புரத்தை உறைய வைத்துள்ளது. அபிராமியை இவ்வளவு கொடூரமாக கொன்றவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
விருத்தாசலம் கீரப்பாளையம் பகுதியை பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர்தான் பின்னாளில் அபிராமியாக உருமாறினார். திருநங்கை அபிராமிக்கு 35 வயசு. விழுப்புரம் அய்யன்கோவில்பட்டு பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வந்துள்ளார்
இந்நிலையில், விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதாவது விழுப்புரம் - செஞ்சி கூட்டுரோடு அருகே உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், பல காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இன்று காலை இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் இது சம்பந்தமாக விசாரணையை கையில் எடுத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இக்கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா போலீசார், வழக்கு பதிவு செய்து 10 திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பணம் பிரச்சனை காரணமாகவே இக்கொலை சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்று முதல்கட்டமாக சொல்லப்பட்டது.



காரில் வந்த மர்மநபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அபிராமியுடன் இருந்த திருநங்கைகள் தெரிவித்தனர். இதனால் போலீசார் உண்மை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டறியும் முயற்சியில் இறங்கினர்.



இரவு நேரங்களில் லாரி டிரைவர்களுடன் பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக வாக்குவாதத்தில் அபிராமி ஈடுபடுவாராம். இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் ஒருவர்தான் அபிராமியை கருங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக