வெள்ளி, 5 ஜூலை, 2019

முல்லைதீவில் புதைத்து வைத்த பாரிய கொண்டு வெடித்தது

IMG_0321_1600x1067  முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில்  மக்கள் அதிர்ச்சி!!  விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0321  e1562328917878
IMG_0343_1600x1067  முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில்  மக்கள் அதிர்ச்சி!!  விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0343  e1562328975680இலைகியா :முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரம்படி வயல்வெளியில் நேற்று  இரவு 9.00 மணியளவில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது இதன் வெடி சத்தம் அருகில் உள்ள  பகுதிகளானா முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு,மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளியவளை, வற்றாப்பளை வரையான கிராமங்களில் உள்ள மக்களால் உணரப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகள் அதிர்ந்துள்ளன. அருகில் உள்ள கேப்பாபிலவு மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.< இது தொடர்பில் தெரியவருகையில் கேப்பாபிலவு பிரம்படி வயல் வெளியினை துப்பரவு செய்த தனியார் ஒருவர் இயந்திரம் கொண்டு துப்பரவு செய்துவிட்டு குப்பைகளுக்கு நெருப்பு மூட்டிவிட்டு சென்றுள்ளார். இதன்போது போரில் பயன்படுத்தப்பட்ட நிலத்தினுள்  புதைந்திருந்த பாரிய  குண்டு ஒன்று நெருப்பின் வெப்பத்தினால் வெடித்து சிதறியுள்ளது. இக்குண்டுவெடிப்பால் சுமார் ஒரு மீற்றர் ஆழத்திற்கும் இரண்டும் மீற்றர் அகலத்திற்கும் அப்பகுதியில்  கிடங்கு தோன்றியுள்ளது.
இச் சம்பத்தினால் கோப்பாபிலவு மக்கள் அதிர்ந்து அச்சமடைந்துள்ளார்கள்.
சம்பவத்தினை தொடர்ந்து  119 பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கேப்பபுலவு மக்களால் முறையிடப்பட்டதை தொடர்ந்து  முள்ளியவளை  பொலிசார் மற்றும் கோப்பாபிலவு படைமுகாமினை சேர்ந்த படையினர் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் தீயினை அணைத்துள்ளார்கள்.
அதனை தொடர்ந்து இன்று காலை குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட படைத்தரப்பினை சார்ந்த அதிகாரிகள் மற்றும்  தடையவியல் பொலீசார் வரவளைக்கப்பட்டு குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை  மேற்கொண்டுள்ளார்கள்.
இருந்த  போதிலும் இந்த வெடிப்பு சம்பவத்தால் எந்தவித உயிரிழப்புகளோ ,  எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை ஆனாலும் இராணுவ முகாம்களுக்கு மத்தியில் தமது சொந்த நிலங்களை  விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து போராடியபடியே வாழும்  கேப்பாபுலவு மக்கள் பெரும் அதிர்சியில் உறைந்தவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
IMG_0335_1600x1067  முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில்  மக்கள் அதிர்ச்சி!!  விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0335  e1562329187171IMG_0329_1600x1067  முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில்  மக்கள் அதிர்ச்சி!!  விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0329  e1562329240423IMG_0320_1600x1067  முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில்  மக்கள் அதிர்ச்சி!!  விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0320  e1562329288962IMG_0313_1600x1067  முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில்  மக்கள் அதிர்ச்சி!!  விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0313  e1562329329366

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக