புதன், 10 ஜூலை, 2019

துப்புரவு பணியாளர்கள் இறப்பில் தமிழ்நாடு முதலிடம்

சமூக நீதி தமிழகத்தின் அவலநிலை!! துப்புரவு பணியாளர்கள் இறப்பில் முதலிடம்zeenews.india.com-shiva-murugesan :புதுடெல்லி: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னும் தொடர்கதையாகி வருகிறது. இந்த கொடுமையால் வருடா வருடம் பலர் உயிரிழந்து வருகின்றனர். துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளை துப்புரவு செய்யும்போது, அதில் இருந்து வெளியாகும் விஷவாயு தாக்கி இறக்கிறார்கள். உரிய உபகரணங்களின்றி சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை, துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது சட்டப்படி குற்றமாகும்.
எந்திரங்களின் மூலம் தான் சாக்கடைகள் சுத்தப்படுத்த வேண்டும் என சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுகளை சுத்தம் செய்ய ஏன் இப்படி பாதாள சாக்கடைகளில் இறங்குகிறார்கள்? முக்கிய காரணம் ஏழ்மை தான். வறுமையின் காரணமாக சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசாங்க ஒழுங்கான பாதுகாப்புக் கவசத்தை கொடுப்பதில்லை என்பது வேதனையான விசியம்.
1993 ஆமா ஆண்டு முதலே மனிதர்கள் நேரிடையாக மனிதக்கழிவுகளைத் துப்புரவு செய்வது தடை செய்யப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் பல இடங்களில் இன்னும் அந்த அவலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.பிக்கள் அசாதுதீன் ஓவைசி மற்றும் சையது இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் துப்புரவு பணியாளர்களின் இறப்புகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பேசிய, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது, செப்டிக் டாங்கிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, 1993 முதல் 620 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 88 சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்ததாக அமைசர் தெரிவித்துள்ளார். அதில் 445 வழக்குகளில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், 58 வழக்குகளில் பகுதி தீர்வு காணப்பட்டதாகவும், 117 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். அதாவது 445 வழக்குகளில் முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது, 58 வழக்குகளில் பகுதி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் பதிவான 88 இறப்புகளில் 52 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என ராம்தாஸ் அத்வாலே தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
செப்டிக் டாங்கிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறந்த துப்புரவுத் தொழிலாளர்கள் எண்ணிக்கைக் குறித்து 15 மாநிலங்களின் விவரங்களை சமர்பித்தார். அதில் தமிழ்நாடடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 144 உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் 131 இறப்புகளுடன் குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது. சமூக நீதிக்கும், மனிதத்தன்மைக்கு பெயர் போன தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது அரசின் அவலநிலைக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக