புதன், 10 ஜூலை, 2019

ஆளூர் ஷாநவாஸ் : தமிழகத்துக்கு கம்யூனிஸ்ட்கள் செய்திருப்பது துரோகம் ..பாஜகவும் காங்கிரசும் கம்யுனிஸ்டுகளும் வரலாற்று பிழை .. இடஒதுக்கீடு விவகாரம் வீடியோ


ஆளூர் ஷாநவாஸ் : சுத்தி வளைத்து கடைசியில் பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக சி.பி.எம்மும் கூறியுள்ளது.
இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியில் புறந்தள்ளபட்ட மக்களுக்கான உரிமை என்னும் அடிப்படையை புரிந்து நிலைப்பாடு எடுக்காத எந்தக் கட்சியும் சமூகநீதி மறுப்புக் கட்சி தான். காங்கிரசை போலவே கம்யூனிஸ்ட்டின் இருப்பும் ஏன் இந்தியாவில் கேள்விக்குறியாகியுள்ளது எனில் அவர்களிடம் இருக்கும் இந்த அடிப்படைச் சிக்கல் தான் அதற்குக் காரணம். பாஜக தன்னை முழுதாக ஆதரிக்கும் முன்னேறிய வகுப்புக்கு உண்மையாய் இருக்கிறது. காங்கிரசும் கம்யூனிஸ்டும் யாருக்காக இருக்கின்றன? தமிழ்நாட்டில் உங்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியின் பெயர் சொல்ல சில உறுப்பினர்கள் உள்ளார்கள் எனில், அதைத் தந்தது இங்குள்ள சமூகநீதிக் கருத்தியலும் அதைக் கட்டிக்காக்கும் களமுமே! அதற்கே துரோகம் செய்வீர்களா?
மக்கள் செல்வாக்கில் மிதந்த எம்.ஜி.ஆர் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் புகுத்த முனைந்து, என்ன நிலைக்கு ஆளானார் என்பது வரலாறு. அவருக்கே அந்த நிலை எனில், உங்களுக்கெல்லாம் இனி என்ன நிலை என்பதை வரும்காலம் சொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக