வெள்ளி, 26 ஜூலை, 2019

தலித் ஆண்களே தலித் பெண்களை பாகுப்பாட்டோடு நடத்தும் போது ....

LR Jagadheesan : Do you wonder why the "metoo" movement in India has not taken off as a mass-based feminist movement despite India being one of the worst countries in the world to be a woman? Do you want to understand why it failed so miserably? Please read this brilliant post.
A must read and share post.
"சமூக செயற்பாடு என்று எடுத்துக்கொண்டாலும் கூட பார்ப்பன, ஆதிக்க ஜாதி, சற்றே வெள்ளை தோல் பெண்கள் கொண்டாடப்பட்ட அளவிற்கு எந்த தலித் பெண்ணும் கொண்டாடப்படவில்லை.
ஏன், தன்னை தலித்தாக காட்டிக்கொண்டு, மிகையான தலித்தியம் பேசி தங்களை பெரும் போராளிகளாக வளர்த்துக்கொண்ட ஆதிக்க ஜாதி பெண்களை கொண்டாடிய அளவிற்கு கூட எந்நேரமும் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி என்று முழங்கிக் கொண்டும், உட்படுத்தப்படும் பல்வகை பாகுபாடுகளை நிமிடம்தோறும் எதிர்த்துப் போராடிக்கொண்டும் இருக்கும் தலித் பெண்களை தலித் ஆண்கள் கொண்டாடியதில்லை.
அப்பெண்களுமே பின்னாட்களில் "நான் தலித் இல்லை, நீங்கள் எல்லாம் அப்படி நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது" என்று சிறிதும் குற்றவுணர்வு இல்லாது பதிவுகள் போட்ட போதும் கூட அப்போலி முகத்திரைகளை விட்டுக்கொடுக்காது கொண்டாடியபடியே தான் இருந்தார்கள். இப்படியான ஈன செயல்களால் அவர்களின் "பிரபல அந்தஸ்துக்கு" எவ்வித பங்கமும் ஏற்படவில்லை.
ஆனால், இப்படியான ஏமாற்று செயல்களினூடாக தன்னை பிரபலமாக்கிக்கொண்ட பெண்களை அம்பலப்படுத்தியதற்காக நான் உட்பட பல தலித் பெண்களும் பல்வேறு வசவுகளுக்கு ஆளாகியிருக்கிறோம். இவையெதையும் பொருட்படுத்தாது, இன்றளவும் அப்போலிகளை பெரும் போராளிகளாக எங்களிடம் வந்து துதி பாடும் தலித் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்போது கூட அந்த ஏமாற்று பிரபலங்களை திட்டிப்பாருங்கள். தலித் ஆண்கள் உட்பட, ஒட்டுமொத்த பொது சமூகமுமே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கும். அதே என்னையோ, என் போன்ற வேறொரு தலித் பெண்ணையோ எத்தனை ஜாதிய வன்மத்தோடு வசை பாடினாலும் தலித் ஆண்கள் கண்டும் காணாதது போல கடந்துவிடுவார்கள்.
தலித் ஆண்களே தலித் பெண்களை பாகுப்பாட்டோடு நடத்தும் போது வாய்ப்புகள், சிறப்புரிமை, மரியாதை என பலவும் வாய்க்கப்பட்ட பார்ப்பன, ஆதிக்க ஜாதி பெண்களையும், தன் சொந்த சமூகமே பாகுபாட்டோடு புறக்கணிக்கும் தலித் பெண்களையும் ஒன்று தான் என்று கூப்பாடு போடுபவர்களுக்கு கண்டிப்பாக மனம் பிறழ்ந்திருக்க வேண்டும்!
இதுவரையிலும் சமூக ஊடகங்களில் மிகவும் கீழ்த்தரமான, வன்மமான, மோசமான ஆபாச வசவுகளுக்கு ஆளான எந்த கருப்புநிற, தலித் பெண்ணிற்காவது பார்ப்பன, ஆதிக்க ஜாதி, வெள்ளைநிற தோல் கொண்ட பெண்ணியவாதிகள் ஒரு சோக உணர்ச்சித்திரமாவது ( ) போட்டிருக்கிறார்களா?
இனியேனும், அனைத்து பெண்களும் ஒன்று தான் என்று பினாத்திக் கொண்டிருக்காமல், கண்களை அகல திறந்து இச்சமூகத்தை பாருங்கள். வேறுபாடுகள் விளங்கும்!"

Kiruba Munusamy : கொஞ்சம் கூட சமூக அறிவே இல்லாமல், சமூக அமைப்பு என்றால் என்னவென்றே தெரியாத பல அரைகுறை முற்போக்குகளும், ஏன் தலித் ஆண்களுமே "பெண்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்கள் தான்" என்று ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி பெண்கள் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியும்? இச்சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விதமாகவே அணுகப்படுகிறாள். ஒரு பார்ப்பன பெண்ணிற்கு கிடைக்கும் வாய்ப்பும், சிறப்புரிமையும், இயல்பான மரியாதையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணிற்கு கிடைப்பதில்லை. அவர்கள் இருவருக்கும் கிட்டும் வாய்ப்பும், சிறப்புரிமையும், மரியாதையும் ஒரு தலித் பெண்ணிற்கு, பழங்குடியின பெண்ணிற்கு, குறவர் சமூகத்து பெண்ணிற்கு கண்டிப்பாய் கிட்டப்போவதில்லை.
இப்போது தோற்றத்திற்கு வருவோம். ஒரு வெள்ளை தோல் கொண்ட பெண்ணிற்கு கிட்டும் வாய்ப்பும், சிறப்புரிமையும், மரியாதையும் எக்காலத்திலும் இவ்வினவாத உலகில் ஒரு கறுப்புநிற பெண்ணிற்கு கிட்டப்போவதேயில்லை. இதில் ஒல்லி, குண்டு என்ற உட்பிரிவு வேறு இருக்கிறது. அதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வெள்ளை தோல் கொண்ட பெண் குண்டாக இருக்கும் பட்சத்தில் "கொழுகொழு, குஷ்பூ" என்று அதுவும் அழகு என்ற வரையறைக்குள் வந்துவிடும். அதுவே கறுப்பான ஒரு பெண் குண்டாக இருக்கும் பட்சத்தில் "இடைவிடாமல் தின்பதே முழுநேர வேலையாக இருப்பது, பூதம், யானை, அது நம்மை நோக்கி வருது ஓடுங்க" என்று கேலிப்பொருளாக்கப்படுவார்கள்.
தன் பெயருக்கு பின்னால் ஐயர், ஐயங்கார், மேனன், அகர்வால், சர்மா, மிஸ்ரா என்று அவர்கள் உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கும் தங்களின் ஜாதிய, சமூகத்து பெயர்களை உடன் சேர்த்துக்கொள்ளும் பெண்கள் இருக்கும்போது எப்படி பெண்கள் அனைவரையும் ஒடுக்கப்பட்டவர்களாக பார்ப்பது?
தலித் பெண்களையும், குறவர் பெண்களையும் காவல் துறையினர் கைது செய்து, காவல் நிலையத்தில் நிர்வாணமாக்குவது, வன்புணர்வது, அப்பெண்களின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவுவது, அவர்களின் பிறப்புறுப்பில் லத்தியை நீண்ட நேரம் நுழைத்து துன்புறுத்துவது என கொடுமைப்படுத்துகிறார்கள். இவற்றை தேசிய பட்டியல் ஜாதிகள் ஆணையத்தின் ஆய்வு குழு சித்திரவதை பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறது. உத்திர பிரதேசத்தில் ஒரு தலித் ஆண் ஆதிக்க ஜாதி பெண்ணோடு ஓடிவிட்டதற்காக, அந்த ஆணின் தங்கைகள் இருவரையும் நிர்வாணப்படுத்தி, ஊர்வலம் போகவிட்டு, ஆதிக்க ஜாதி ஆண்கள் பலரும் கூடி வன்புணர்வு செய்ய வேண்டுமென இலக்கமுறை இந்தியாவை (Digital India) கொண்டாடிக் கொண்டிருக்கும் 2016-இல் ஆதிக்க ஜாதியினர் மட்டுமே பங்குவகிக்கும் ஒரு சிற்றூர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியது.
இதெல்லாம் ஒரு பார்ப்பன, ஆதிக்க ஜாதி பெண்ணிற்கு நடக்குமா? இந்த பொது சமூகம்தான் அவர்களை அப்படி நடத்தவிட்டுவிடுமா? இவ்வளவு கூட வேண்டாம். அவர்களின் நடத்தையை பற்றி உங்களால் ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. ஒட்டு மொத்த சமூகமும் பால் பேதமின்றி, ஜாதி பேதமின்றி பார்ப்பன, ஆதிக்க ஜாதி பெண்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிப்பதற்காக நமக்கெதிராக திரும்பும். ஸ்வாதி கொலையே அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் கொலையுண்ட போது அக்கொலைக்காக பதறியதைக் காட்டிலும், அவரை கற்புக்கரசி என்று நிரூபிக்க கதறியவர்களே அதிகம்.
இப்போது கறுப்பு, வெள்ளை பாகுப்பாட்டிற்கு வருவோம். இவ்வகை பாகுபாடானது உலகம் முழுவதுமே நிலவும் போது பெண்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? இங்கே வெள்ளைநிற பெண்களுக்கு கிடைக்கும் எதுவுமே ஒரு கறுப்புநிற பெண்ணை பொறுத்தவரை எட்டா கனியே!
நம் நாட்டு நீதிமன்றங்களையே எடுத்துக்கொள்வோம். கறுப்பான தோலோடும், வழக்கறிஞர் தொழிலில் எட்டு ஆண்டுகள் அனுபவத்தோடும் இருக்கும் நான் என்னதான் காட்டு கத்து கத்தினாலும் வாய்தா கூட வழங்கமாட்டார்கள். ஆனால், வெள்ளை தோலோடும், கூடுதலாக ஒல்லியான தோற்றமும், பெயருக்கு பின்னால் உயர்வாக கருதப்படும் ஜாதியும் இருந்துவிட்டால் போதும் அப்பெண் வாய்தாவே கேட்டாலும் சாதகமான தீர்ப்புகளை வழங்குவார்கள். அதற்கு நானே சாட்சி!
இவ்வளவு ஏன்? உலகத்தையே ஆட்சி செய்யும் அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். அமெரிக்க கறுப்பின பெண்களின் நிலை, அந்நாட்டு வெள்ளை பெண்களை விடவும் எவ்வளவு இழிவானதாக இருக்கிறது. அமெரிக்க கறுப்பின பெண்கள் பெரும்பாலும் இழிவாக கருதப்படும் வேலைகளிலேயே அமர்த்தப்படுவர். அத்தகைய சூழலில் பெண்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்பதும், அவர்களுள் பிரிவினை இல்லை என்பதும் எவ்வளவு முட்டாள்தனமானதோ, அதே அளவு முட்டாள்தனமானது தான் இந்திய ஆணாதிக்க, ஜாதிய, நிறவாத, இனவாத, மதவாத சூழலில் அனைத்து பெண்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்று வாதிப்பதும்.
சமூக செயற்பாடு என்று எடுத்துக்கொண்டாலும் கூட பார்ப்பன, ஆதிக்க ஜாதி, சற்றே வெள்ளை தோல் பெண்கள் கொண்டாடப்பட்ட அளவிற்கு எந்த தலித் பெண்ணும் கொண்டாடப்படவில்லை.
ஏன், தன்னை தலித்தாக காட்டிக்கொண்டு, மிகையான தலித்தியம் பேசி தங்களை பெரும் போராளிகளாக வளர்த்துக்கொண்ட ஆதிக்க ஜாதி பெண்களை கொண்டாடிய அளவிற்கு கூட எந்நேரமும் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி என்று முழங்கிக் கொண்டும், உட்படுத்தப்படும் பல்வகை பாகுபாடுகளை நிமிடம்தோறும் எதிர்த்துப் போராடிக்கொண்டும் இருக்கும் தலித் பெண்களை தலித் ஆண்கள் கொண்டாடியதில்லை.
அப்பெண்களுமே பின்னாட்களில் "நான் தலித் இல்லை, நீங்கள் எல்லாம் அப்படி நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது" என்று சிறிதும் குற்றவுணர்வு இல்லாது பதிவுகள் போட்ட போதும் கூட அப்போலி முகத்திரைகளை விட்டுக்கொடுக்காது கொண்டாடியபடியே தான் இருந்தார்கள். இப்படியான ஈன செயல்களால் அவர்களின் "பிரபல அந்தஸ்துக்கு" எவ்வித பங்கமும் ஏற்படவில்லை.
ஆனால், இப்படியான ஏமாற்று செயல்களினூடாக தன்னை பிரபலமாக்கிக்கொண்ட பெண்களை அம்பலப்படுத்தியதற்காக நான் உட்பட பல தலித் பெண்களும் பல்வேறு வசவுகளுக்கு ஆளாகியிருக்கிறோம். இவையெதையும் பொருட்படுத்தாது, இன்றளவும் அப்போலிகளை பெரும் போராளிகளாக எங்களிடம் வந்து துதி பாடும் தலித் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்போது கூட அந்த ஏமாற்று பிரபலங்களை திட்டிப்பாருங்கள். தலித் ஆண்கள் உட்பட, ஒட்டுமொத்த பொது சமூகமுமே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கும். அதே என்னையோ, என் போன்ற வேறொரு தலித் பெண்ணையோ எத்தனை ஜாதிய வன்மத்தோடு வசை பாடினாலும் தலித் ஆண்கள் கண்டும் காணாதது போல கடந்துவிடுவார்கள்.
தலித் ஆண்களே தலித் பெண்களை பாகுப்பாட்டோடு நடத்தும் போது வாய்ப்புகள், சிறப்புரிமை, மரியாதை என பலவும் வாய்க்கப்பட்ட பார்ப்பன, ஆதிக்க ஜாதி பெண்களையும், தன் சொந்த சமூகமே பாகுபாட்டோடு புறக்கணிக்கும் தலித் பெண்களையும் ஒன்று தான் என்று கூப்பாடு போடுபவர்களுக்கு கண்டிப்பாக மனம் பிறழ்ந்திருக்க வேண்டும்!
இதுவரையிலும் சமூக ஊடகங்களில் மிகவும் கீழ்த்தரமான, வன்மமான, மோசமான ஆபாச வசவுகளுக்கு ஆளான எந்த கருப்புநிற, தலித் பெண்ணிற்காவது பார்ப்பன, ஆதிக்க ஜாதி, வெள்ளைநிற தோல் கொண்ட பெண்ணியவாதிகள் ஒரு சோக உணர்ச்சித்திரமாவது ( ) போட்டிருக்கிறார்களா?
இனியேனும், அனைத்து பெண்களும் ஒன்று தான் என்று பினாத்திக் கொண்டிருக்காமல், கண்களை அகல திறந்து இச்சமூகத்தை பாருங்கள். வேறுபாடுகள் விளங்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக