ஞாயிறு, 14 ஜூலை, 2019

பாதாள சிறையா? - மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு ..

தந்தி டிவி : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கட்டடம், பாதாள சிறைச்சாலையா என ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் அருகே, கார் பார்க்கிங் பணிக்காக 30 அடி அளவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் சேர்த்து கட்டப்பட்ட பழமையான கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் அமைக்கப்படும் இடத்தின் மேற்பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை ஒன்று இருந்ததாகவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம், அந்த சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாநகரில் உள்ள வரலாற்று எச்சங்களை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக