வியாழன், 11 ஜூலை, 2019

பட்டியலினத்தவர் வர்க்க பார்வையை முற்றிலும் இழந்துவிட்டனரா? கம்யுனிஸ்டுகளின் பொருளாதார பாடம் ..

Adv Manoj Liyonzon : .1,72,500 வரை வரி செலுத்தும் ₹.8 லட்சம் வரை வருமானம் உடையோர் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஏழைகளா!?
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை என்பது மாபெரும் அரசியல் பிழை. சாதிய படிநிலை உணர்வு என்பேன்
முதலாவது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் "இழப்பீடு" தான் இடஒதுக்கீட்டு பிரதிநித்துவம் என்று தெரிந்திருந்தும், முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரித்தது அரசியல் அயோக்கியத்தனம் என்பேன். மாபெரும் அரசியல் பிழை என்பேன்.
இது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமல்ல, ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும்.
இரண்டாவதாக, வருடத்திற்கு ₹.8 லட்சம் வரை ஈட்டுவோர் எந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஏழைகளாக தெரிகின்றனர்!?
அதாவது வருடத்திற்கு 8 லட்சம் என்பது ஒரு நாளைக்கு ₹.2186. இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியே ₹.1,72,500.
இந்திய அரசை பொறுத்தவரை ஏழ்மை என்பது நாளொன்றுக்கு கிராமபுற வருமானமாக ₹.32 (வருடத்திற்கு ₹.11,712) மற்றும் நகர்ப்புற வருமானமாக ₹.47 (வருடத்திற்கு ₹.17,202) இருக்க வேண்டும். அதாவது ஒரு ஏழையின் அதிகப்படியான வருமானமே வருடத்திற்கு ₹.17,202 மட்டும் தான் இருத்தல் வேண்டும்.

ஆனால் வர்க்க அரசியலை பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எப்படி ₹.8 லட்சம் ஈட்டி, ₹.1,72,000 வரி செலுத்துவோர் ஏழைகளாக தெரிகின்றனர்!?
அடுத்ததாக சர்வதேச ஏழ்மை வரம்புப்படி இந்தியாவில் நாளொன்றுக்கு ₹.220 (வருடத்திற்கு ₹.80,520) ஈட்டுவோர் ஏழ்மையில் வருகின்றனர்.
இந்திய அரசை பொறுத்தவரை, ஏழ்மையை சமாளிக்க நாளொன்றுக்கு ஒரு தொழிலாளியின் குறைந்த பட்ச கூலியே ₹.336 (வருடத்திற்கு ₹.1,22,976) ஆக இருத்தல் வேண்டும்.
அதே இந்திய அரசு, வருடத்திற்கு ₹.2.50 லட்சம் வரை ஈட்டுவோருக்கு ஏன் வரி விளக்கு அளித்திருக்கிறது தெரியுமா!? உண்மையில் இந்தியாவில் ஏழ்மையை சமாளிக்க நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ₹.684 ஈட்ட வேண்டும்.
ஆக ₹.8 லட்சம் அல்ல. இந்திய அரசு நிர்ணயித்த வருடத்திற்கு ₹.17,202 மட்டுமே ஈட்டும் முற்பட்ட சாதியினர் தான் ஏழைகள். அவர்களுக்கு மட்டும் தான் பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு பொருந்தும். அல்லது வருடத்திற்கு அதிகப்படியாக ₹.2.50 லட்சம் வரை ஈட்டும் முற்பட்ட சாதியினரே ஏழைகள். அவர்களுக்கு மட்டும் தான் பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு பொருந்தும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடியிருந்தால், உண்மையில் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வர்க்க பார்வை உள்ளது என்று நம்பலாம்.
ஆனால் வருடத்திற்கு ₹.1,72,500 வரை வரி செலுத்தும் வருமானம் உள்ளவர்களுக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்க ஆதரித்திருப்பது உள்ளபடியே இவர்கள் அடிப்படை பொருளாதார அறிவே இல்லாத சாதிய படிநிலை உணர்வு கொண்ட கூட்டம் என்று நான் கருதுகிறேன்.
இந்த மயிறு லட்சனத்தில் போகிற இடமெல்லாம்
"பட்டியலினத்தவர் வர்க்க பார்வையை முற்றிலும் இழந்துவிட்டனர்" என்று தலித்துகளுக்கு பொருளாதார பாடம் எடுக்க வேண்டியது.
ப்ளடி நான்சென்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக