செவ்வாய், 23 ஜூலை, 2019

நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டி படு கொலை


நெல்லை, முன்னாள் மேயர், உமா மகேஸ்வரி, வெட்டிக்கொலைதினமலர் :நெல்லை, முன்னாள் மேயர், உமா மகேஸ்வரி, வெட்டிக்கொலை திருநெல்வேலி: நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 1996 ல் உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக