திங்கள், 15 ஜூலை, 2019

ரோஜா ஆந்திரா முதலீட்டு கழக தலைவரானார் .. தொழில் அதிபர்களுக்கு அழைப்பு

Roja Selvamani mla Taken Charge as APIIC Chairman
tamil.oneindia.com -VelmuruganP : திருப்பதி : நடிகையும் நகரி எம்எல்ஏவுமான ரோஜா ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை முதலீட்டு கழக அலுவலகத்தில் ஆந்திர மாநில தொழில்சாலைகள் துறை முதலீட்டு கழக தலைவராக இன்று (திங்கள்கிழமை) பொறுப்பேற்று கொண்டார்.
நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நகரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு நடை பெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலிலும் சமீபத்தில் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்ட பின் ரோஜாவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி நிச்சயமாக அமைச்சர் பதவி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.


ஆனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ப்தி அடைந்த ரோஜா ஒரு மாதத்திற்கு முன் அமராவதி உள்ள ஆந்திர தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார். இரண்டு நாட்கள் சென்றபின் ரோஜாவை தன்னுடைய வீட்டிற்கு வரவைத்து ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை முதலீட்டு கழக தலைவர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை முதலீட்டு கழக தலைவராக நியமிக்கப்பட்ட ரோஜா இன்று மங்களகிரியில் உள்ள ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை முதலீட்டுக் கழக அலுவலகத்தில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை பூஜைகள் நடத்தி ஏற்றுகொண்டார்.

பின்னர் அங்கு அதிகாரிகள் இடையே பேசிய ரோஜா, "ஆந்திராவில் தொழில் துறை அபிவிருத்தி ஏற்படவேண்டும் என்பதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியாக இருக்கிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல் நிதிநிலை அறிக்கையில் தொழில்துறை அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் ஆந்திராவில் தொழில் தொடங்க முன்வரவேண்டும். ஆந்திராவில் தொழில் துவங்குபவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் தொழில் துவங்க தேவையான நிலம் வழங்கப்படும். உள்ளூரை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும்" என கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக