வெள்ளி, 5 ஜூலை, 2019

வைகோ ராஜ்யசபா செல்ல முடியும்.. தடை இல்லை! .. வழக்கறிஞர் பேட்டி..

மின்னம்பலம் : வைகோ மீதான தேச துரோகக் குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்திருக்கும் நிலையில் இந்த தண்டனை அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதை தாக்கத்தை ஏற்படுத்துமா?
இதுபற்றி மதிமுக வழக்கறிஞரும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான புதுக்கோட்டை செல்வம் பேசுகையில்,
“ இரு வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்தான் வகிக்கும் பதவியை இழக்கும் நிலையோ, தேர்தலில் போட்டியிட முடியாத நிலையோ ஏற்படும். ஆனால் மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால் ராஜ்யசபாவுக்கு அவர் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. வேட்பு மனு தாக்கலில் இந்த வழக்கு விவரத்தையும் சேர்க்க வேண்டும் அவ்வளவுதான்.
மேலும் ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்பட்டது சரியானது அல்ல என்பது மேல் முறையீட்டில் உறுதிப்படுத்தப்படும். எனவே வைகோவுக்கு இந்தத் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தாது” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக