ஞாயிறு, 21 ஜூலை, 2019

ஆர் .கே.செல்வமணி இயக்குனர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி

இயக்குநர் சங்கத் தேர்தலில் செல்வமணி வெற்றி!மின்னம்பலம் :
இன்று நடைபெற்ற இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றிபெற்றுள்ளார்.
தமிழ்நாடு திரைத்துறை இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அவ்வகையில், முந்தைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக சென்னை வடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்று வந்தது.
தேர்தல் அலுவலராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் பொறுப்புகளை கவனித்தார். இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டனர்.
பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 2045 பேர் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக முடிவு செய்யப்பட்டிருந்தது. மாலை 5.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவுபெற்றது. மொத்தமாக 1503 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1386 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஆர்.கே.செல்வமணியை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக