வெள்ளி, 5 ஜூலை, 2019

வைகோவுக்கு நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு . ஓர் ஆண்டு சிறை .. 10000 ரூபாய் அபராதம் .. மேல்முறையீட்டுக்கு ஒரு மாத அவகாசம்

பிந்திய செய்தி .. ஒரு ஆண்டு சிறையும் 10000 ரூபாய் அபராதமும் வைகோவுக்கு தண்டனை! மேல் முறையீடு செய்ய ஒரு மாதம்அவகாசம் .. தண்டனை அறிவிக்கப்பட்டாலும் வைகோ ராஜ்யசபாவுக்கு தெரிவாவதில் சிக்கல் இல்லை என்ற கருத்து பலராலும் தெரிவிக்கபடுகிறது
tamil.indianexpress.com/tamil :இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம். அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது இந்திய தண்டனை சட்டத்தில் தேச துரோக குற்றம் (123ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட்டது
இதற்கிடையில் பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் “ஈழத்தில் நடப்பது என்ன” என்ற தலைப்பில் நடந்த கூடத்தில் பேசியது தொடர்பாக க்யூ பிரிவு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்த வழக்கிலிருந்து வைகோவை 2016 அக்டோபர் 20ஆம் தேதி விடுதலை செய்தது.

இந்நிலையில் நான் குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழா பேச்சு தொடர்பாக எழும்பூர் நீதிமன்ற வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் 52 நாட்கள் கழித்து மே 25ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார்.
பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.
அந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை கூடுதல்  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் அவர் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கான தண்டனையையும் இன்றே அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக