திங்கள், 1 ஜூலை, 2019

அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாளர்கள் தடபுடல் வரவேற்பு!


nakkheeran.in - kalaimohan" : மத்திய பிரதேசத்தில் நகராட்சி ஊழியர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு அவரது ஆதரவாளர்கள் அவரை தடபுடலாக வரவேற்றனர். கடந்த 26ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் மட்டையால் மூன்று தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா தாக்கினார். இதற்காக கைது செய்யப்பட்ட அவருக்கு இரண்டு நாட்கள் கழித்து நேற்று சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் இன்று அவரது அலுவலகம் முன்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டு ஆர்ப்பரித்தனர். அவரை வரவேற்க நகரம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. சிறையிலிருந்து அவர் வெளியானதும் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய பாஜக எம்எல்ஏ ஆகாஷ், அதிகாரியை தாக்கியதற்காக வருத்தப்படவில்லை மீண்டும் பேட்டை எடுக்கும் வாய்ப்பு ஏற்படாது என நம்புவதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக