சனி, 6 ஜூலை, 2019

சமஸ்கிருதத்தை தமிழோடு சமமாக வைத்து வைரமுத்து பேசியது மிகப்பெரும் தவறு..


ஆலஞ்சியார் : தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்.. சென்றாண்டு நிர்மலா சீதாராமனோடு ஒரு மேடையில் அமர்ந்து கவிபேரரசு பேசினார் ..
நிதிநிலை அறிக்கையில் சங்கத்தமிழோடு தொடங்கிய நிர்மலா ..
அவருக்கு புரிந்திருக்கிறது சமஸ்கிருதத்தில் சொல்ல ஏதுமில்லை என ஆனால் நம்மவர்களுக்கு தான் இன்னமும் புரியவில்லை ..தமிழை தொடர்ந்து புறந்தள்ளும் மத்திய அரசிற்கெதிராக அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் .. இந்த ஒப்பீடே தவறானது .. உலகின் மூத்தமொழி தமிழ் .. அதை எந்தவிதத்தில் தடையலாம் வலுவிலக்க செய்யலாமென கருதிகிறார்கள் ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது ..
சமஸ்கிருதம் வேதமொழியென்றும் அது கடவுளுக்கான மொழியென்று பண்டைய இந்தியாவில் பேசபட்ட மொழியென்றும் சொல்லி வருகிறவர்கள் ஏன் வழக்கொழிந்து போனதென்பதை சொல்லமுடியவில்லை.. சமஸ்கிருத மொழி இந்திய துணைக்கண்டத்தில் மொழி அல்ல ஆரியர் வருவிற்கு பிறகே வந்ததென்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதற்கு அவர்கள் கூறும் தரவுகள் /காரணிகள் ஈரான் நாட்டிலிருந்து நம்மிடைய வந்தது வேதகால வடமொழியானது
ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் அவெஸ்தன் மொழி கூறகளை கொண்டது.. அதற்கான இலக்கணங்கள் ஏதுமில்லை.. மாறாக பார்ஸீய மற்றும் யூதமொழி வடிவங்களை கொண்டது .. தனித்துவ அடையாளங்கள் ஏதுமில்லாத மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் அடங்கும் ..

..
அதோடு தமிழை இணையாக ஆக்குவதென்பது ஒருவகை அத்துமீறல் அயோக்கியத்தனம்.. செம்மொழிக்கான படித்தரங்கள் எவை..?
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், செம்மொழியாவது யாது? என்ற வினாவுக்கு விடையளிக்கும் போது, "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று கூறியுள்ளார்.. இவை சமஸ்கிருதத்திடமில்லை..
..
செம்மொழிக்கான தகுதிகளில்,
தொன்மை,பிறமொழித் தாக்கமில்லாத் தனித்தன்மை, தாய்மைத்தன்மை,தனித்தன்மை கொண்ட
இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு
பொதுமைப் பண்பு ,நடுநிலைமை
பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
உயர்சிந்தனை ,கலை, இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு இவை அனைத்தும் வேண்டும் இது தமிழுக்கன்றி சமஸ்ருதத்திடம் இல்லை ..காரணம் சமஸ்கிருதம் தனித்தன்மை கொண்டதல்ல பிறமொழி கலப்பும் .. பிறமொழிகளின் மீது கலந்தும் இருக்கிறது.. தாய்மைதன்மை முற்றிலுமில்லாத அதாவது அதன் கிளைமொழிகளை உருக்காகவோ /கொண்டதாகவோ இல்லை..
ஆனால் தமிழின் கிளைமொழியாக அல்லது பிரிந்ததாக கைரளியர் பேசும் மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் துளுவும் உண்டு இதுபோன்ற மொழியின் கிளைகள் சமஸ்கிருதத்திற்கு இல்லை..
..
இலக்கிய பழைமைதன்மை என்பது தமிழைப்போல இவர் கூறும் மற்றொரு கண்ணுக்கு இல்லை.. வேதமொழி என அறியபட்டு .. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 12400 பேர் மட்டுமே பேசுகிற மொழி ஈரானிய மொழி கலப்பை கொண்ட மொழி குறைவானவர் பேசுகிறார்கள் அழிந்துவரும் மொழி என்பதை தவிர தமிழோடு இணைந்து பேசுவதற்கு சரியான காரணிகளை தரவில்லை.. வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துவடிவம் இருந்ததில்லை முன்பு லத்தீன் வரிவடிவங்களே பயன்படுத்தபட்டன இப்போது இந்தி வரிவடிவங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன ..
மொழி வளமோ பொதுதன்மையோ வரிவடிவமோ இலக்கண சிறப்போ ..இல்லாத செத்த மொழியோடு .. தமிழை இணைத்து பேசுவது கூட தவறு..
..
அரிதாக பேசுகிறார்கள் என்பதற்காக அதை தமிழோடு இணைப்பது தமிழுக்கு செய்யும் துரோகம்.. பார்பனர்களில் கூட யாரும் இதை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதில்லை தமிழுக்கு இணையான மொழி ஏதுமில்லை..
எல்லா தகுதியும் ஒருங்கேப்பெற்ற வழக்கில் பெருபான்மை மக்கள் பேசும் தொன்மையான இலக்கிய சான்றுகளும் தரவுகளும் கூடிய உலக மொழிகளின் தாய் தமிழ்.. பதவி விருது புகழ் தேவைதான் அதற்காக பெற்றவளை இழிவாகவோ தரங்தாழ்த்தி இணைவைத்தோ பேசுவதை ஏற்க முடியாது..
#தமிழ்_எங்கள்_உயிருக்குநேர்..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக