திங்கள், 15 ஜூலை, 2019

அதானிக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட விமான நிலையங்கள்! ADANI AIRPORT SCAM (KERALA)

athani ambaniChozha Rajan : பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்! முதல் பகுதி A விளம்பரத்திலும் வெளிநாட்டு பயணத்திலும் அரசாங்கத்தை நடத்திவிடலாம் என்று வெற்று ஆடம்பரம் செய்த மோடியின் பாஜக, மத்தியப்பிரதேசத்தில் விளம்பரம் செய்ததில்கூட 14 கோடி ரூபாய் ஊழல் செய்தது. அதாவது போலியான, அல்லது பதிவே செய்யப்படாத 234 இணையதளங்களின் பெயரால் மக்கள் பணம் 14 கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறது...

நக்கீரன் : ஆதனூர் சோழன் : அந்தப்பக்கம் பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதல் என்று வேடிக்கை காட்டி பெருமிதக் கூச்சல் போட்டுக்கொண்டே, இந்தப்பக்கம் ஆறு முக்கிய விமான நிலையங்களில் 5ஐ அதானி குழுமத்தின் கவுதம் அதானிக்கு தாரைவார்த்தார் மோடி. இதையும் கேரளா முதல்வர் பினராயி விஜயன்தான் முதலில் வெளிக்கொண்டுவந்தார்.



விமான நிலைய பராமரிப்புத் துறையில் அதானி குழுமத்திற்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை. அப்படிப்பட்ட குழுமத்திற்கு ஐந்து விமான நிலையங்கள் கிடைத்தது மர்மமாக இருக்கிறது என்றார் பினராயி. திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையமும் இந்த ஐந்து விமான நிலையங்களில் ஒன்று. இந்த விமானநிலையத்தை பராமரிக்கு அதானி குழுமம் பயணி ஒருவருக்கு 168 ரூபாய் என்று ஏலம் கேட்டிருந்தது.

ஆனால், கேரளா மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் பயணி ஒருவருக்கு 135 ரூபாய் என்றும், ஜிஎம்ஆர் நிறுவனம் பயணி ஒருவருக்கு 63 ரூபாய் என்றும் ஏலம் கேட்டிருந்தது. குறைந்த தொகை ஏலம் கேட்டவருக்கு ஏலம் கொடுக்காமல் அதிகபட்ச தொகையை கேட்டவருக்கு ஏலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்திற்கு விமான நிலைய பராமரிப்பு பற்றி தெரியாவிட்டாலும் பிரதமர் மோடியை நன்றாக தெரிந்திருந்ததால்தான் இந்த ஏலம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று பினராயி கிண்டல் செய்திருக்கிறார். அத்துடன், விமான நிலைய பராமரிப்புக்காகவே உருவாக்கப்பட்ட கேரளா மாநில தொழில் வளர்ச்சிக்கழகத்திற்கு உரிமத்தை வழங்க வேண்டும் என்றும் மோடிக்கு கடிதம் எழுதினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக