/tamil.news18.co :
கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளின் விவரங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. <முக நிர்வாகி சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் உள்ளிட்ட மூவரை போலீசார் பிடித்துள்ள நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.கடந்த 23-ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள தனது வீட்டில் நெல்லையின் முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடியது. முதற்கட்ட விசாரணையில், 20 சவரன் நகைகள் 17 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் ஒரு வாட்ச் ஆகியவை காணாமல் போனதால் ஆதாயக் கொலை தான் என போலீஸ் முடிவு கட்டியது. ஆனால் அதற்கு மேல் விசாரணையை நகர்த்த போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் போலீசார் திணறி வந்தனர்.
நகைக்காக நடைபெற்ற ஆதாய கொலை, சொத்துப் பிரச்னை, முருகசங்கரன் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்னை என பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்ட பின்னும் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் போலீசாரால் விசாரணையை முன்னெடுக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான், அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் தி.மு.க பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சீனியம்மாளுக்கும் கொலைக்குமான நேரடித் தொடர்பு குறித்த ஆதாரங்கள் இல்லாததால் அந்த விசாரணையிலும் பின்னடைவு ஏற்பட்டது
இதையடுத்து, கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளின் விவரங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
துப்பு துலங்கியது எப்படி?⇊↩
இதில் கொலை நடந்த அன்று சந்தேகப்படும் படியாக ஒரு வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் 2 முறை உமா மகேஸ்வரியின் வீட்டை கடந்து சென்றது தெரியவந்தது. இதனால் அந்த கார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அந்த காரில் சென்றவர்கள் யார்? அது யாருடையது? என்பது பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த கார் தி.மு.க. பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலையில் அவருக்கு நிச்சயம் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
மதுரையில் பதுங்கியிருந்த கார்த்திகேயனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து நெல்லை கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது கார்த்திகேயன் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரசியல் பகை காரணமாகவே கொலை நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. தனது தாய் சீனியம்மாள் அரசியலில் உமா மகேஸ்வரிக்கு சீனியர் என்றும், அவரது அரசியல் வருகைக்கு பிறகு தமது தாயின் அரசியல் வளர்ச்சி அழிந்து போனதாகவும் கார்த்திகேயன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
யார் இந்த சீனியம்மாள்?
1996-ல் உருவாக்கப்பட்ட நெல்லை மாநகராட்சியின் மேயர் பதவி தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த பதவியை பிடிக்க சீனியம்மாள் முயற்சித்த நேரத்தில், உமா மகேஸ்வரிக்கு சீட் கிடைத்தது
2011-ல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சீனியம்மாளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என சீனியம்மாள் தரப்பு எதிர்பார்த்ததாகவும், அதையும் உமா மகேஸ்வரிக்கே கொடுத்ததால் ஆத்திரமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சமத்துவ மக்கள் கட்சிக்கு சென்ற சீனியம்மாள், சில மாதங்கள் கழித்து மீண்டும் தி.மு.கவுக்கே திரும்பி வந்தார்.
திமுக மகளிர் அணி துணை அமைப்பாளராக இருந்த உமா மகேஸ்வரியிடம் நெருக்கம் காட்டிய சீனியம்மாள், 2016 தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் சீட் பெற முயற்சித்துள்ளார். உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் மூலம் 50 லட்சம் ரூபாய் பணத்தை கார்த்திகேயன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 2016ஆம் ஆண்டு தேர்தலில் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் தெரிகிறது.உமா மகேஸ்வரியை கொலை செய்தால் மட்டுமே தமது தாயின் அரசியல் வாழ்க்கை சோபிக்கும் என நினைத்த கார்த்திகேயன் திட்டமிட்டு வீடு புகுந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கார்த்திகேயன் வாக்குமூலம்
ஆனால் கார்த்திகேயன் வாக்குமூலத்தில், சொந்த பகை காரணமாக கொலை செய்ததாகவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும் திரும்பத் திரும்ப கூறி வருவதாகவும் போலீசார் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
தொடர்ந்து கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர்.கொலைச் சம்பவத்தை அரங்கேற்றி விட்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹோட்டலில் முன்பு கைகுலுக்கிக் கொள்ளும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் மூவரும் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், நாகர்கோவில் சாலையில் உள்ள தென்குளம் அடுத்த புதுக்குளம் கிராமத்தில் முட்புதர்களில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். கார்த்திகேயன் உள்ளிட்ட மூவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில், உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவரின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்ட்ட கார்த்திகேயன்

சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில், அவர்கள் மூவரும் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், நாகர்கோவில் சாலையில் உள்ள தென்குளம் அடுத்த புதுக்குளம் கிராமத்தில் முட்புதர்களில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். கார்த்திகேயன் உள்ளிட்ட மூவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில், உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவரின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக