வியாழன், 18 ஜூலை, 2019

அத்திவரதர் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரழப்பு .. வீடியோ


மாலைமலர் :காஞ்சீபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் உள்பட 3 பேர் பலியாகினர். அத்திவரதர் உற்சவம்- கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி அத்திவரதர் உற்சவத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, இன்று காலை முதல் அத்திவரதரை தரிசிக்க அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் பக்தர் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக