செவ்வாய், 16 ஜூலை, 2019

கோவில் பூசாரி உள்பட 3 பேர் நரபலி? - கோவில் முழுவதும் ர‌த்த‌த்தை தெளித்து சென்ற கொடூரம்


thanthi tv : ஆந்திராவில், 3 பேர் தலை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டதாக, பொது மக்களிடையே அச்சம் பரவியுள்ளது.
 ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டம் கொத்தி கோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஓய்வு பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டி அவரது சகோதரி கமலம்மா ஆகியோர் பூஜை செய்து வந்தனர். இந்நிலையில் கோவில் முன்பு சிவராம் ரெட்டி, அவரது சகோதரி கமலம்மா மற்றும் கொத்திகோட்டா கிராமத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் ஆகியோர் தலை வெட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

 கோவில் முழுவதும் அவர்களது ரத்தம் தெளிக்கப்பட்டிருந்த‌தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். தகவல் அறிந்து வந்த அனந்தபுரம் போலீசார், மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட சிவராம்ரெட்டி, கமலாம்மா குடும்பத்தினருக்கு எந்த வித முன்பகையும், தகராறும் இல்லை என கூறும்,
ப்பகுதி மக்கள், நரபலி கொடுப்பதற்காகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தவிர, அவர்கள் பூஜைசெய்து வந்த கோவிலில், புதையல் இருப்பதாகவும், அதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக