வெள்ளி, 26 ஜூலை, 2019

மத்திய பிரதேசம்.. 2 பாஜக எம் எல் ஏக்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்


.sathiyam.tv - mohamed : மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் வாக்களித்துள்ள நிலையில் அவர்கள் ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை தொடர்ந்து அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதனால் பெரும்பான்மை இல்லாத மத்திய பிரதேசத்திலும் பாஜகவினர் ஆட்சியை கைபற்றும் முயற்சியில் இறங்ககூடும் என காங்கிரஸ் கவலையில் உள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை காங்கிரஸ் வென்றது. 108 இடங்களை பாஜக பிடித்தது. நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆகியோரின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாஜக MLA க்கள் 2 பேர் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்து பாஜக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த எம்.எல்.ஏ க்கள் கூறுகையில்; நாங்கள் சொந்த வீட்டுக்கு திரும்பி விட்டோம் என தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக