ஞாயிறு, 28 ஜூலை, 2019

நிசான்: பறிபோகும் 1,700 இந்தியர்களின் வேலை!

நிசான்: பறிபோகும் 1,700 இந்தியர்களின் வேலை!மின்னம்பலம் : 1,700 இந்தியர்களைப் பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது நிசான் மோட்டார் நிறுவனம்.
ஜப்பானின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம் நிசான் மோட்டார். இந்தியா உட்பட பல நாடுகளில் நிசான் நிறுவனம், கார் தயாரிப்பு ஆலையைக் கொண்டுள்ளது.
வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக, தனது செலவீனத்தைக் குறைக்கும் நோக்கில் உலகளவில் 12,500 பேரையும், இந்திய அளவில் 1,700 பேரையும் ஆட்குறைப்பு செய்யப்போவதாக நிசான் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில், நிசான் மற்றும் ரெனால்டு நிறுவனம் இணைந்து, ரெனால்டு நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறது. இது 4.4 லட்சம் யூனிட் கார் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

“ஒட்டுமொத்த பயன்பாட்டு விதத்தை அதிகரிக்கும் பொருட்டு, 2022 நிதியாண்டுக்குள், உலகளாவிய உற்பத்தியில் 10 சதவிகித அளவை நிசான் நிறுவனம் குறைக்க உள்ளது. நிறுவனம் கிட்டத்தட்ட 12,500 பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளது.
இதற்கான முயற்சி ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. செயல்திறனில் முன்னேற்றத்துக்குக் கணிசமான நேரம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என நிசான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,700 பேரைப் பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தாலும், எந்தெந்த இடங்களில் பணி நீக்கம் நடைபெறப் போகிறது என அறிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக