திங்கள், 8 ஜூலை, 2019

10 வீத இட ஒதுக்கீடு காங்கிரஸ் ஆதரவு ...பாஜக பாதையில்தான் போகுமென்றால் என்ன வெங்காயத்துக்கு ...

aloor.shanavas : பா.ஜ.க போகும் பாதையில் தான் காங்கிரஸ் பயணிக்கும் எனில், பிறகு என்ன மதச்சார்பற்ற கட்சி வெங்காயம் அது இது எல்லாம்.
வடமாநில உயர்சாதி வாக்குவங்கிக்கு அஞ்சியே இந்த 10% இடஒதுக்கீடு எனும் சமூக அநீதிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், முன்னேறிய வகுப்பைச் சார்ந்த ஒருவனும் காங்கிரசை திரும்பிக்கூட பார்க்கவில்லை. படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து நின்ற நிலையில், தென் மாநிலங்களின் தயவால் காங்கிரசின் இருப்பு நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. அப்படியிருக்க, இங்கே 3% கூட இல்லாத உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடை கொடுக்கலாம் என காங்கிரஸ் சொல்கிறது எனில் எவ்வளவு ஆணவம் இது.
காங்கிரசை தடம் தெரியாமல் அழிக்க ஆர்.எஸ்.எஸ் தேவையில்லை. பா.ஜ.க.வோ, மோடியோ, மாநிலக் கட்சிகளோ தேவையில்லை. காங்கிரசே போதும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக