மாலைமலர் :
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின்
சியால்கோட்டில் உள்ள ஆயிரம் வருட பழமையான இந்து கோவில் 72 வருடத்திற்குப்
பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
1000 வருட பழமையான கோவில்
பாகிஸ்தானின் சியால்கோட் தாரோவாலில்
1000 வருட பழமையான ஷவாலா தேஜா சிங் கோவில் உள்ளது. இது சர்தார் தேஜா சிங்
என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்
போது மூடப்பட்டது.
1992-ல் பாபர் மசூதி இடிப்பின்போது
பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த கலவரத்தில்
இக்கோவில் தாக்கப்பட்டது. அதை சரிசெய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது.
இந்த பணி விரைவில் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையே பக்தர்கள்
வழிபடுவதற்காக 72 ஆண்டுகளுக்குப்பின் கோவில் மீண்டும் திறப்பட்டது.
கோவிலுக்கு அருகாமையில் வசித்து வரும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் இதுவரை கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். தற்போது அதிகமானோர் வருகின்றனர். நாட்டின் பிற பகுதியில் உள்ள இந்துக்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக