செவ்வாய், 25 ஜூன், 2019

கமலா ஹாரிஸ் கோபாலன் : I born black and i die black' என்று முழங்குகிறார்.

Ruben Jay :; சுதா ரகுநாதன் மீது கொலை வெறியில் இருக்கும்,சார்ந்தோரும்
சங்கிகளும் இந்த கதையை கேளுங்கள்.
கருப்பு வெள்ளை படத்தில் இருக்கும் பெண்மணியின் பெயர் டாக்டர் ஷியாமளா.அவரது அப்பா பெயர் பி.வி கோபாலன்,இந்திய வெளிவிவகார துறை அதிகாரி.அம்மா ராஜம்.ஷியாமளா பள்ளியில் படிக்கும்போது கர்நாடக சங்கீதத்தில் தங்கப்பதக்கமெல்லாம் வென்றவர்.
மேற்படிப்புக்கு அமெரிக்கா போனபோது காதலில் விழுந்தார்.காதலன் பெயர் Donald Harris.அவரும் சுதா ரகுநாதன் மருமகனைப் போலவே கருப்பர்.ஜாமாய்கன் அமெரிக்கன்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.மூத்த மகளுக்கு கமலா என்று பெயரிட்டார், அந்தப் குழந்தை வளர்ந்து வளர்ந்து இப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில செனட்டராக இருக்கிறது. கமலா ஹாரிஸ் என்றால் மொத்த அமெரிக்காவுக்கும் தெரியுமளவு பிரபலம்.
அடுத்த அதிர்ச்சி செய்தியை கேளுங்கள்,
வருகிற 2020 நவம்பர் 3 ம்தேதி நடக்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்,ஜனநாயகக் கட்சி வேட்பாளராக டொனால்டு ட்ரம்பை எதிர்த்து நிற்கப்போவது கமலா ஹாரிஸ்தான்.


ஆனால் , உங்களுக்கு ஒரு பேட் நியூஸ். அவரை நம்ம மைலாப்பூர் பொம்னாட்டி யு.எஸ் பிரசிடெண்ட்டா ஆகரதுன்னா சும்மாவான்னு பெரும பேசுனா மாட்டிக்குவீங்க!
ஏன்னா,கமலா தன் பிரச்சார மேடைகளில் இப்போதே ' I born black and i die black' என்று முழங்குகிறார்.
ஆகவே,இப்படி ஒரு நாள் சுதாரகுநாதன் பேத்தியோ பேரனோ நீங்கள் பீற்றிக்கொள்ளும் இடத்துக்கு வரலாம்,அதனால் அடக்கி வாசியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக