ஞாயிறு, 2 ஜூன், 2019

அமெரிக்க விசாவுக்கு சமூக வலைதள விவரங்கள் தேவை .. facebook youtube linkdin instagram.... 5 years details ?

தினமலர் : புதுடில்லி: அமெரிக்கா விசா பெற வேண்டும் என்றால், சமூக வலைதள கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில், விசா கேட்பவர்களின் கடந்த 5 ஆண்டுகால செயல்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்ய உள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் விதிகளில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்க விசா பெற விரும்புபவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்தி வரும், பேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாகிராம், லிங்கெடின், உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை அளிக்க வேண்டும். சமூக வலைதளங்களில், அந்த நபரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் பயன்படுத்தும் இமெயில் முகவரி, மொபைல் எண்ணையும் அளிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
இதனால், 1.5 கோடி வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், தூதரக மற்றும் அலுவலக ரீதியில் விசா கேட்பவர்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வேலைபார்க்க அல்லது படிக்க வருபவர்கள் கட்டாயம், சமூக வலைதள விவரங்களை அளிக்க வேண்டும்.
அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் கொண்டு வரப்படுகிறது. தங்கள் சமூக வலைதள பயன்பாடு தொடர்பாக, தவறான தகவல்களை அளிப்பவர்கள், கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக