சனி, 22 ஜூன், 2019

ADMK அமைச்சர்களின் வீடுகளுக்கு தடையற்ற தண்ணீர் லாரி .. தமிழ் ஊடகங்கள் மறைப்பு .. ஆங்கில ஊடகம் .. வீடியோ


Kokkarakko Sowmian : நேற்று டைம்ஸ் நவ் தேசிய ஆங்கில ஊடகத்தில்... ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள் ஒரே ஒரு குடம் குடிநீருக்கே பிச்சை எடுக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில்... குடிநீர் இல்லாமையால்.... ஒட்டுமொத்த மாநிலமே, நிலை தடுமாறி நிற்கின்ற நிலையில்....
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு 9000 லிட்டர் கார்ப்பரேஷன் தண்ணீர் தினமும் மூன்று வேளை சப்ளை செய்வதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டி விட்டனர்..!
அவர்கள் அத்தோடு விடாமல் அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை தொலபேசியில் அழைத்து... அதற்கான விளக்கம் கேட்க...
அதற்கு அவரோ நான் டெல்லியில் இருக்கின்றேன்... அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெனாவெட்டாக பதில் அளிக்க...
மக்கள் தவிக்கும் போது உங்கள் வீட்டுக்கு அதுவும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கார்ப்பரேஷன் தண்ணியை பயன்படுத்துவது... அதிலும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது நியாயமா என்று கேட்க...
அந்த கல்வெட்டு எம்பி மீண்டும்... நான் குடியரசு தலைவர் மீட்டிங்கில் இருந்தேன்... அதனால் அது பற்றி எனக்குத் தெரியாது என்று பந்தா காட்ட...
குடியரசு தலைவரோடு வெறும் ஐந்து நிமிடம் தான் உங்கள் சந்திப்பு எல்லாம்... அதுவும் நேற்றே முடிந்து விட்டது... என்று நெறியாளர் அசால்ட் காட்ட...
நம்ம கல்வெட்டு புகழ்... சேர சோழ பாண்டிய மன்னர் வகை புகழ் எம்பியோ ஃபோன் இணைப்பை துண்டித்து ஓடி விட்டார்..!

தேசிய ஊடகம், அதிலும் ஆங்கில ஊடகம் இப்படி ஆளும் அதிமுகவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி அவர்கள் அண்டர்வேரை அவிழ்த்து தொங்க விட...
இங்கோ நம் தமிழக ஊடகங்களில்...
உங்க எம்பிக்கள் ஏன் தமிழ் வாழ்கன்னு நாடாளுமன்றத்தில் முழங்கினார்கள் என்று திமுகவினரிடம் கேள்வி கேட்டு விவாதித்துக் கொண்டுள்ளனர்..!
இதில் இன்னும் மகா கேவலமாக தம்பி தமிழரசன் என்ற நெறியாளர்... தமிழ் வாழ்கன்னு சொன்னா பாஜகவின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ... தமிழக நலன்கள் பாதிக்குமே என்றெல்லாம் வேறு பிதற்றுகிறார்..!
அவர் முகத்தில் காறி உமிழ வேண்டும் போல் இருக்கின்றது..!
ஆனால் இன்றைக்கும் திமுகவினர் தான் தலைவர் தளபதியாரின் கட்டளையை ஏற்று... லாரிகளில் குடிநீர் கொண்டு வந்து குடும்பத்திற்கு இரண்டு குடங்களை இலவசமாக விநியோகிக்கின்றனர்..

1 கருத்து:

  1. நன்றி! மிகவும் அருமையான பதிவு, சிங்காநல்லூர் தொகுதி சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

    Singai g ramachandran
    AIADMK ITWing State Secratry
    Singanallur Constituency
    AIADMK ITWing Tamilnadu
    Singanallur
    voter id verification in singanallur

    பதிலளிநீக்கு